கூலி படத்துக்கு ரஜினி போட்ட ஆர்டர்... லியோல விட்டதை பிடிக்க தயாராகும் லோகேஷ்!

logesh rajni
சூப்பர்ஸ்டார் ரஜினி, லோகேஷ் கனகராஜ் காம்போவில் கூலி படம் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. படத்தைப் பற்றிய அப்டேட்டுகளை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
விஜயின் லியோ படத்துல படத்துக்கு நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களை கதையில் ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை. இது லோகேஷோட தப்பு. எங்கே பார்த்தாலும் சஞ்சய் தத். ஏன்டா இவங்களை எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் மாதிரி யூஸ் பண்ணி இருக்கீங்க? இவ்ளோ ஆர்டிஸ்ட்டுகளை வைத்து அவர்களுக்கு உண்டான ஸ்க்ரீன்பிளே இல்லை. அவங்களை வேலை வாங்கத் தெரியலைன்னு விஜயோட தந்தை எஸ்ஏசியே ஒரு மேடையில சொன்னாராம்.
கூலி படத்துல எல்லாமே பெரிய நடிகர்கள்தான். நாகர்ஜூனா இன்னைக்கும் தெலுங்குல பெரிய ஸ்டார். அமீர்கான் வந்ததே ரஜினிக்காகத்தான். உபேந்திரா ரஜினியின் தீவிர ரசிகராம். சுருதிஹாசன் கமலின் மகள். இவர் ரஜினியின் மகளாக படத்துல நடிச்சிருக்காராம்.

coolie
சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க மறுத்த சத்யராஜ் கூலி படத்துல ஒத்துக்கிட்டாருன்னா அவருக்கான கேரக்டர் பிரமாதமாக இருக்கு. அதனால்தான் ஒத்துக்கிட்டாரு. இப்போதைக்கு படம் மூன்றரை மணி நேரத்துக்கு எடுத்துட்டாங்களாம். அதை இரண்டரை மணி நேரத்துக்குள்ள கொண்டு வரணும். அதே நேரம் நடிகர்களோட ஸ்கோப்பும் மிஸ் ஆகக்கூடாது.
மிஸ்டர்பாரத் படத்துல நிறைய புட்டேஜ் இருந்ததால சத்யராஜ் கேரக்டரைக் கட் பண்ணச் சொன்னாராம் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். அப்போது சத்யராஜிடம் யாரோ ஒருவர் ரஜினிதான் கட் பண்ணச் சொன்னதாக சொன்னாராம். அந்த மாதிரி பிரச்சனை கூலிக்கு வந்துடக்கூடாது. அதே மாதிரி லியோ போல பெரிய ஸ்டார்களை வைத்து அவர்களுக்கு வேலை இல்லாமப் போயிடக்கூடாது.
அப்படிங்கறதுக்காக ஒரு கோ டைரக்டரா, அசிஸ்டண்ட் டைரக்டரா ரஜினி எடிட்டிங் டேபிள்ல உட்கார வாய்ப்பு இருக்குதாம். இந்தப் படத்துல 1000 கோடியை அடிக்கும்னு உறுதியா சொல்றாங்க. அதுக்கான காரணம் என்னன்னா பேன் இண்டியா படம். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம்னு எல்லா மொழிகளில் இருந்தும் பெரிய ஸ்டார்கள் நடிக்கிறாங்க.
இந்தியில முக்கியமாக அமீர்கான் நடித்துள்ளதால் படத்தின் பலம் இன்னும் அதிகமாகுது. கூலி படம் மே மாதம் 1ல் இருந்து ஆகஸ்ட் 14க்கு ரிலீஸைத் தள்ளி வச்சதுக்கு இதுதான் காரணமாம். பழைய ரஜினி படங்களோட ரெபரன்ஸ் எல்லாம் லோகேஷ் இதுல கொண்டு வரப்போகிறாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.