கூலி படத்தில் ரஜினி சம்பளம் இவ்வளவுதானா? விஜயிடம் இப்படி தோத்துட்டாரே!...
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கூலி திரைப்படத்திற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்திருக்கும் நிலையில் விஜயிடம் தோல்வி அடைந்துவிட்டதாக கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்ற சர்ச்சை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. விஜயை சூப்பர்ஸ்டார் என வாரிசு விழாவில் சரத்குமார் பேசிவிட்டு செல்ல ரசிகர்கள் அடித்துக்கொள்ள தொடங்கினர். ஒருவருக்கு ஒருவர் கமெண்ட்களால் தெறிக்கவிட்டனர்.
இதையும் படிங்க: தளபதி69 படத்தின் டைட்டில் இதுதானா? ரைட்டு பிரச்னை படுஸ்பீடுல வருதுனு சொல்லுங்க…
இதில் ரஜினிகாந்த் மற்றும் விஜயின் ஒவ்வொரு திரைப்படம் அதன் ரிலீஸ் வசூல் விவரங்கள் விவாதிக்கப்பட்டது. ஆனால் எல்லா கணக்கிலும் விஜய் மட்டுமே முன்னணியில் இருக்கிறார். மற்ற நடிகர்களை விட ஒவ்வொரு படத்துக்கு பெத்த தொகையில் சம்பளத்தை உயர்த்தி கொண்டே செல்கிறார்.
லியோ திரைப்படத்தில் 200 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார். தற்போது வெளியாகி கோட் திரைப்படத்தில் அவருக்கு 230 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். இந்நிலையில் அடுத்து வெளியாக இருக்கும் தளபதி69 திரைப்படத்தில் 275 கோடி பிளஸ் ஜிஎஸ்டியை சம்பளமாக வாங்க இருக்கிறாராம்.
இதனால் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களின் சம்பளத்தை தாண்டி இருக்கிறார். கடைசி படம் என்பதாலும் தற்போது விஜய் கொண்டாடப்பட்டு வருகிறார். இந்நிலையில் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு 100 கோடி மட்டுமே சம்பளம் பேசப்பட்டு இருக்கிறதாம்.
இதையும் படிங்க: எக்ஸில் மணிமேகலைக்கு குவியும் சப்போர்ட்… அசிங்கப்படும் விஜே பிரியங்கா…
ஆனால் வசூலில் ஒரு பங்கையும் பேசி இருப்பதால் அதுவும் பெரிய அளவிலான தொகைக்குள் வராது. இதனால் ரஜினிகாந்துக்கு 300 கோடி விஜயின் சம்பளத்தை தாண்ட முடியாது என்றே சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் வசூல் மற்றும் சம்பளத்தில் நம்பர் 1ஆக இருப்பது விஜய் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.