பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!
Coolie: இள நடிகர்களைப் போல பரபரப்பாக ஏங்கி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்படி அவரின் சுறுசுறுப்பிற்கு தற்போது ஒரு பெரிய தடை உருவாகி இருக்கிறது. இது குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பல வருடங்களாக ரஜினிகாந்த் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் கடந்த வருடத்திலிருந்து தற்போது வரை இரண்டு படத்தை முடித்து இன்னொரு பட ஷூட்டிங்கிற்கே மாறிவிட்டார்.
இதையும் படிங்க: Pushpa 2: ஆத்தீ! ஓடிடி மட்டும் இம்புட்டு கோடியா?
இதில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையின் திரைப்படம் டப்பிங் பணிகளை முடித்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. எப்போதும் போல இப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பு செய்திருக்கிறார்.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படக்குழு குறித்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வந்தது. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் மற்ற மொழி மாஸ் பிரபலங்களை ரஜினி படத்தில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மட்ட சாங்க அஜித்கிட்ட காட்டுனதும்.. தல ரியாக்ஷன் குறித்து வெங்கட் பிரபு
அதை தொடர்ந்து, கூலி படத்தில் நாகர்ஜூனா, ஷொபின் ஷாபீர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் ரஜினிகாந்தின் பெயர் தேவா எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்கும் போது, அங்கு பெய்து வரும் கனமழையால் ஷூட்டிங் பகுதி முழுதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் தடைப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சூட்டிங் அடுத்த வாரம் விசாகப்பட்டினத்தில் மீண்டும் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.