தல, தளபதியா… கோட் படத்தில் இந்த காட்சியை மிஸ் பண்ணிடவே கூடாதுங்கோ…

by Akhilan |
தல, தளபதியா… கோட் படத்தில் இந்த காட்சியை மிஸ் பண்ணிடவே கூடாதுங்கோ…
X

#image_title

Goat: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் படம் குறித்த இன்னும் சில சுவாரசிய தகவல்கள் தற்போது கசந்து இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் விஜய் டெஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா, ப்ரேம்ஜி, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. முதல்முறையாக இப்படத்தின் வில்லனாக மைக் மோகன் நடிக்கிறார்.

இதையும் படிங்க: ரஜினியை செருப்பால அடிப்பேன்னு சொன்ன பாலசந்தர்…! நடந்தது இதுதான்..!

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதுவரை நான்கு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நேற்று வெளியான மட்ட பாடல் மட்டுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மற்ற 3 பாடல்கள் விஜய் ரசிகர்கள் இருக்கே ஏமாற்றத்தை தான் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரே ட்ரெய்லரால் ரசிகர்களும் இருந்த கவலையை வெங்கட் பிரபு தீர்த்து இருக்கிறார். அந்த வகையில் படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் சில கசிந்து ரசிகர்களுக்கு தெரிந்திருக்கிறது.

இதையும் படிங்க: போட்டிக்கு வர்ற கங்குவா படத்தைப் பற்றி ரஜினி என்ன நினைப்பாரு? வேற லெவல் திங்கிங்..!

ஒரு பாடலில் நடிகை திரிஷா நடனமாட இருப்பது, நடிகர் சிவகார்த்திகேயனின் சிறப்பு கேமியோ, கேப்டன் விஜயகாந்தின் ஏஐ எண்ட்ரி உள்ளிட்ட சில விஷயங்கள் இடம்பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெரிய கேள்வி ஒன்றுக்கு படத்தில் நடித்த நடிகர் அரவிந்த் ஆகாஷ் பதிலளித்திருக்கிறார்.

இப்படத்தில் சிஎஸ்கே வீரர்கள் இடம் பெறுவார்கள் என முன்னரே கூறப்பட்டது. ஆனால் அதில் தோணி இருப்பாரா என கேள்வி முன் வைக்கப்பட்டது. இது குறித்து அரவிந்த் ஆகாஷ் கூறும்போது, படத்தில் சிஎஸ்கே மேட்சின் காட்சிகள் இருக்கும். அப்போ அதில் தோனி இல்லாமல் எப்படி.

CSK

படத்தில் தோனி வருவார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தளபதி திரைப்படத்தில் தலையின் எண்ட்ரி மாஸாக இருக்கும் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர். செப்டம்பர் 5ல் ரிலீஸ் ஆக இருக்கும் கோட் திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை விறுவிறுவென நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Next Story