Connect with us

வெட்டியா இருக்குறது சந்தோஷம்னா ஜாலியா இருங்க….! ஆதியின் அடுத்த டார்கெட் இதுதான்…!

Cinema History

வெட்டியா இருக்குறது சந்தோஷம்னா ஜாலியா இருங்க….! ஆதியின் அடுத்த டார்கெட் இதுதான்…!

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு…இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா என பல மீம்ஸ்களுக்கு சொந்தக்காரர் நம்ம ஹிப் ஹாப் தமிழா…இந்தப் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருபவர் ஆதி.

ஜல்லிக்கட்டுக்காக பரவலாகப் பேசப்பட்டவர். இளம் ரசிகர்களின் ஸ்டார். இவரைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தமிழ்சினிமாவில் எப்பவுமே துரு துருவென இருக்கும் இளம் நடிகர் ஆதி. அவருக்கு என்று பல நண்பர்கள் இருக்காங்க. சோஷியல் மீடியாவுக்கு என்று ஒரு டீம் வைத்துள்ளார்.

Aathi

நட்பே துணை படத்திற்கு ஹாக்கி விளையாட்டு வீரருக்காக நாலு மாசம் பக்காவா டிரெயினிங் எடுத்து பாடியை மெயிண்டைன் பண்ணிருக்காரு. அதற்கப்புறம் நடிக்க உள்ள படங்களுக்காக ஜிம்முக்கு சென்று வருகிறார்.

தனது மொபைலில் வால் பேப்பரில் தினமும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற லிஸ்ட்டையே வைத்துள்ளார். அவர் இளைஞர்களுக்கு இதைத் தான் சொல்கிறார். என் பாட்டை ஜாலியா கேளுங்க. ஹேப்பியா இருங்க. முடிஞ்ச அளவுக்கு பாசிடிவ்வாவே இருங்க. அவ்ளோ தான்…என எளிமையாக சொல்கிறார். பிரியாணி தான் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம்.

இன்னும் பத்து வருஷம் கழிச்சி எங்க இருப்பீங்கன்னு ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எவரிவேர்னு பதில் சொல்லிருக்காரு…ஆதி…அதுபற்றி இவ்வாறு சொல்கிறார்.

எனக்கு டீச்சிங் ரொம்ப இன்ட்ரஸ்ட். எங்க அப்பா வந்து வாத்தியாரு. சின்னவயசுல இருந்தே பார்த்து பார்த்து வளர்ந்ததால அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். டீச்சிங் என்னைக்குமே அது ஒரு தனி கிக். எங்காவது ஒரு இடத்துல புரொபசரா ஜாயிண்ட் பண்ணிட்டு…அட்லீட்ஸ் ஒரு விசிட்டிங் புரொபசரோ, கெஸ்ட் புரொபசரோ ஜாயிண்ட் பண்ணிட்டு காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் கூட டீச் பண்ணனும்.

Aathi3

அதுக்கப்புறம் க்ளோதிங் பண்ணிக்கிட்டிருக்கோம். மியூசிக் லேபிள் ஆரம்பிச்சோம். இதன் மூலமா நிறைய ஆர்டிஸ்ட்களுக்கு எயிடு பண்ண முடியும். பிஎச்டி யும் அதுல தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். இன்டிபென்டன்ட் மியூசிக் தான்.

இதுவே நான் பிலிம் மியூசிக் தான்…இந்தியாவுலயே எனக்கு தெரிஞ்சி அது மாதிரி வரல. சோ…இதுக்குத் தான் இவ்ளோ டைம் ஆகுது. இதுல தான் எனக்கு இன்ட்ரஸ்ட்.

அதுதான் அந்த எவரிவேர். இருக்குறதே ஒரு லைப்..இதுல எல்லாத்தையும் பண்ணிப் பார்த்துடணும்…ஜீவாகிட்ட சினிமாட்டோகிராபி கத்துக்கிட்டு இருக்கேன். இப்ப தான் போன்ல ஒரு மியூசிக் வீடியோ எடிட் பண்ணிட்டு இருக்கேன். வெட்டியா இருக்குறது சந்தோஷமா இருக்கும்னா ஜாலியா இருங்க.

ஹேப்பியா இருந்தா மட்டும் பண்ணுங்க. இல்லேன்னா சும்மா இது பண்ணனுமேன்னுலாம் பண்ணுனா அது ஒர்க்கே ஆகாது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top