பரோட்டா சூரிக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?!.. யாருப்பா தயாரிப்பாளரு!.. பாக்கணும் போல இருக்கு!.

by சிவா |
soori
X

Actor soori: மதுரையை சேர்ந்த சூரி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தார். சின்ன சின்ன படங்களில் கும்பலோடு ஒருவராக நிற்பார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் சிறப்பாக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

எனவே அன்று முதல் ‘பரோட்டா சூரி’ என எல்லோரும் அழைக்க துவங்கினார்கள். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடிக்க துவங்கி முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகவும் மாறினார். குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுடன் அவர் அடித்த லூட்டி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

இதையும் படிங்க: லியோ ஸ்பெஷல் ஷோவுக்கும் செக்!.. விஜய் ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.

விஜய், அஜித், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். விடுதலை படம் மூலம் வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக மாற்றினார். இந்த படத்தில் மனசாட்சி்க்கு சரியெனப்படும் விஷயத்தை செய்யும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் சூரி.

இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பின் முழுநேர கதாநாயகனாக சூரி மாறிவிட்டார். இப்போது விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் சூரிக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: ஜோதிகாவை பார்த்து ரஜினி சொன்ன வார்த்தை!. அட அப்படியே நடந்துச்சே!. தலைவரு தீர்க்கதரிசிதான்!..

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்திலும் சூரி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கருடன் என பெயர் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி என சொல்லப்படுகிறது.

சூரியை ஹீரோவாக வைத்து ரூ.40 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் உருவாவது திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. விடுதலை வெற்றி பெற்று நல்ல வசூலை பெற்றதால் தயாரிப்பாளருக்கு இந்த நம்பிக்கை வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: அந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பிய கமல் பட பாடல்… ஆண்டவரை காப்பாத்தினதே அவர்தானாம்!…

Next Story