AR Rahman: திரைத்துறையில் ஒரு உதவி இயக்குனருக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைப்பது என்பதே அரிது. அப்படியே கிடைத்தாலும் அப்படம் வெளிவரவேண்டும். வெளியே வந்தாலும் அப்படம் ரசிகர்களுக்கு பிடித்து வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அந்த இயக்குனர் காணாமல் போய்விடுவார். இதுக்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.
அதேபோல், ஒரு படம் ஹிட் கொடுத்த இயக்குனர் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி படங்களை இயக்கி அவைகளும் வெளியாகி ஹிட் அடித்தால்தான் அந்த இயக்குனர் தயாரிப்பாளர்களாலும், ரசிகர்களாலும் கவனிக்கப்படுவார். தொடர்ந்து 2 அல்லது 3 படங்கள் ஹிட் கொடுத்துவிட்டால் அவரை தேடி நடிகர்களும், தயாரிப்பாளர்களுமே போவார்கள்.
இதையும் படிங்க: கமல் வச்ச கன்னிவெடி!.. 150 கோடி கொடுத்தும் இப்படியா?!.. பிரபாஸுக்கு நேரமே சரியில்ல…
மற்றொன்று சினிமாவை பொறுத்தவரை தொடர்ந்து படங்களை இயக்கி கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் காணாமல் போய்விடுவோம். பல புதிய இயக்குனர்கள் முதல் ஹிட் கொடுத்துவிட்டு அடுத்த படத்திற்கு பல வருடங்களெல்லாம் காத்திருக்கிறார்கள். ராட்சசன், நேற்று இன்று நாளை, அடங்க மறு போன்ற படங்களின் இயக்குனர்களின் அடுத்த படங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு பல காரணங்களை சொல்ல முடியும். முக்கிய காரணமாக இருப்பது நடிகர்கள்தான்.
நடிகர் கவினை வைத்து டாடா என்கிற ஹிட் படத்தை கொடுத்தவர் கணேஷ் கே. பாபு. இப்படம் வெளியாகி 7 மாதங்கள் ஆகிவிட்டது. அடுத்த கதையை தயார் செய்து நடிகர்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறார். இவரின் கதையை கேட்ட துருவ் விக்ரம் நடிக்க சம்மததித்துள்ளார். லைக்காவும் இப்படத்தை தயாரிக்க முன் வந்தது.
இதையும் படிங்க: அரசியல் எண்ட்ரிக்காக விஜய் போடும் பக்கா திட்டம்!… ஆடியோ ரிலீஸில் நடக்குமா களேபரம்?
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் நினைக்க அவரிடம் பேசப்பட்டு அவரும் சம்மதித்துவிட்டார். இந்நிலையில், திடீரென ‘இந்த படத்திற்கு நான் இசையமைக்க முடியாது’ என ஏ.ஆர்.ரஹ்மான் பின் வாங்கிவிட்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாமல் இந்த படம் எப்படி என நினைத்த துருவ் விக்ரமும் இப்படத்திலிருந்து பின் வாங்கிவிட்டாராம். இதனால், தவித்து வருகிறார் இயக்குனர் கணேஷ் பாபு.
ஏ.ஆர்.ரஹ்மான் இல்லையென்றால் வேறு இசையமைப்பாளரை வைத்து படத்தை உருவாக்கலாம். இதில் ஒரு இயக்குனரின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது. ஆனால் துருவ் விக்ரம் போன்ற வாரிசு நடிகருக்கு அந்த வலியெல்லாம் புரிய வாய்ப்பில்லை. இத்தனைக்கும் அவரின் அப்பா விக்ரம் நல்ல வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருந்த கதையெல்லாம் அவருக்கு தெரியாது போல!.
இதையும் படிங்க: உங்க மார்கெட்ட தக்கவச்சுக்கனும்னா தயவுசெஞ்சு இத செய்யாதீங்க! விஜய்க்கு இப்படி ஒரு அட்வைஸா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…