Connect with us
kamal

Cinema News

கமல் வச்ச கன்னிவெடி!.. 150 கோடி கொடுத்தும் இப்படியா?!.. பிரபாஸுக்கு நேரமே சரியில்ல…

Actor kamal: விக்ரம் திரைப்படத்தின் மெகா வெற்றி நடிகர் கமல்ஹாசனை மீண்டும் பிஸியாக்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று இதுவரை கமல்ஹாசன் நடிப்பில் வெளியான எந்த படமும் வசூலிக்காத அளவுக்கு பல நூறு கோடிகளை வசூலித்துவிட்டது.

இதனால் 30 கோடியாக இருந்த தனது சம்பளத்தை கமல்ஹாசன் ரூ..150 கோடியாக உயர்த்திவிட்டார். மேலும் ஹெச்.வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒருபடம் என பிஸியாகிவிட்டார். நாயகன் படத்திற்கு பின் 36 வருடங்கள் கழித்து கமலும் மணி ரத்னமும் இணையவுள்ளனர்.

இதையும் படிங்க: கமல் மகளுக்கே இப்படியொரு நிலைமையா!.. பப்ளிக்கில் ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறிய ரசிகர்.. என்ன ஆச்சு?

விக்ரம் படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. கமல் இன்னும் அடுத்த படத்தை துவங்கவில்லை. அதேநேரம், அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது. ஒருபக்கம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கமல் பிஸியாகிவிட்டார்.

விரைவில் ஹெச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் துவங்கும் என சொல்லப்படுகிறது. விக்ரம் திரைப்படத்திற்குப் பின் மல்டி ஸ்டார் அதாவது பல நடிகர்களும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படங்கள் அதிகரித்து வருகிறது. ரஜினி கூட மோகன்லால் மற்றும் சிவ்ராஜ்குமார் ஆகியோரை தனது ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்தார்.

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் அர்ஜூன் உட்பல பல நடிகர்களும் நடித்துள்ளனர். கமலுக்கு இப்போது தெலுங்கு சினிமாவில் டிமாண்ட் அதிகரித்துள்ளது. பிரபாஸ் நடிக்கும் புதிய படமான கல்கியிலும் கமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருந்தது. மேலும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருந்தது.

இதையும் படிங்க: லியோ படத்தில் விக்ரம்… லோகேஷை பகிரங்கமாக மாட்டி விட்ட கமல்ஹாசன்… இருக்குமோ!

ஆனால், கமல் இன்னும் கால்ஷீட் கொடுக்கவில்லை. எனவே, படப்பிடிப்பு துவங்க தாமதமாகும் என சொல்லப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி கல்கி படத்தை நினைத்த நேரத்தில் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த படத்தில் 20 நாட்கள் மட்டுமே நடிக்கும் கமலுக்கு ரூ.150 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

கமல் எப்ப மனசு வைப்பார் என காத்திருக்கிறார் பிரபாஸ். அவரின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘ஆதி புருஷ்’ படமும் மண்ணை கவ்வியது. ஏற்கனவே கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படமும் ரிலீஸ் தேதி தள்ளிபோய்விட்டது. இப்போது கல்கி படத்தின் படப்பிடிப்பு தள்ளி போய்விட்டது.

பிரபாஸுக்கு இது போதாத காலம் போல!…

இதையும் படிங்க: லோகேஷ் என் ஆளு தான்!… ரஜினி எனக்கு போட்டி.. ஆனால் இது மட்டும் இல்லை… குஷியான கமல்!

google news
Continue Reading

More in Cinema News

To Top