விருதுக்கு சோக்கா போஸ் தந்த நயன்தாரா… முழுசா சொல்லாமல் ஊழலா செய்றீங்க?
Nayanthara: சமீபத்தில் நடிகை நயன்தாராவிற்கு சிறந்த நடிகைக்கான தாதா சாகிப் பால்கே விருது கொடுக்கப்பட்டது. இதுகுறித்த புகைப்படத்தினை பெருமையாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால் அந்த குறிப்பிட்ட விருது குறித்த சில விமர்சனங்களும் வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா சமீபத்தில் நடித்த பத்துக்கும் மேற்பட்ட படங்கள் தொடர் தோல்வியில் அமைந்தது. இதில் அவர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படம் மட்டும் விதிவிலக்காக 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. அப்படத்திற்கு நிறைய விமர்சனங்கள் இருந்தாலும் படம் ஹிந்தி உலகில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சமீபத்தில் இப்படத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: தங்கச்சின்னு கூப்பிட்ட பொண்ணு கூட ஜோடியா?.. நடிக்க மறுத்த விஜயகாந்த்.. அட அவரா!..
அது மட்டுமல்லாது ஷாருக்கானுக்கு சிறந்த நடிகர், நயன்தாராவிற்கு சிறந்த நடிகை, அட்லீக்கு சிறந்த இயக்குனர் விருது கொடுக்கப்பட்டது. அதுப்போல அனிமல் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுக்கும் விருது கிடைத்தது. இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நயன் கூட தன்னுடைய இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். இது பெரிய அளவில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. தாதா சாகேப் பால்கே விருதா? நயனுக்கா? என பல கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் அந்தகுறிப்பிட்ட விருதுக்கும் அரசு சார்பில் கொடுக்கப்படும் வாழ்நாள் சாதனையாளர்களுக்குமான பால்கே விருதுக்கும் சம்மந்தம் இல்லையாம். இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா கொடுக்கும் விருதும் தனிப்பட்டதாம். இந்திய அரசாங்கம் கொடுக்கும் விருது 1969 ஆம் ஆண்டு முதல் தரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சாப்பிட கூட விடாமல் விஜயகாந்தை தடுத்த இயக்குனர்!.. அதுக்கு பின்னாடி இருக்கும் காரணம் இதுதான்!..