அஜித் இல்லனா மார்க் ஆண்டனி படமே இல்ல!.. சீக்ரெட்டை உடைத்த விஷால்!.. அட சொல்லவே இல்ல!..

பல வருடங்களாக நடித்து வந்தாலும் மிகவும் அரிதாகவே ஹிட் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த 2வது திரைப்படமான திமிரு நல்ல வசூலை பெற்று விஷாலை ஒரு கமர்ஷியல் நடிகராக மாற்றியது. அதன்பின், லிங்குசாமியின் இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சண்டக்கோழி படமும் சூப்பட் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

சண்டக்கோழி படம் வெளியாகி 18 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இந்த 18 வருடங்களில் விஷால் கொடுத்த வெற்றிப்படங்கள் மிகவும் குறைவுதான். ஹரியின் இயக்கத்தில் அவர் நடித்த பூஜை படம் ஓட்டும் நன்றாக ஓடியது. மீண்டும் லிங்குசாமியுடன் கை கோர்த்து அவர் தயாரித்து நடித்து வெளியான சண்டக்கோழி 2 படமும் ஓடவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த இரும்புத்திரை, ஆம்பள ஆகிய படங்கள் ஹிட் அடித்தது.

இதையும் படிங்க: கில்லி படத்தில் முக்கிய விஷயத்தை மாற்றிய விஜய்!. அட இது டைரக்டருக்கே தோணலயே!…

ஆனால், ஆக்சன், எனிமி, லத்தி என தொடர் தோல்விப்படங்களை கொடுத்தார். இந்நிலையில்தான், ஆதிக் ரவிசச்ந்திரன் இயக்கத்தில் அவரும், எஸ்.ஜே.சூர்யாவும் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளி விஷாலின் மார்க்கெட்டை தக்க வைத்தது.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய விஷால் ‘ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் சாருடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த போது மார்க் ஆண்டனி கதையை அவரிடம் சொல்லி இருக்கிறார். அவர்தான் விஷாலிடம் சென்று இந்த கதையை சொல். அவருக்கு இது பொருத்தமாக இருக்கும்’ என கூறியிருக்கிறார். அதன்பின்னர்தான் ஆஜிக் என்னை சந்தித்து கதையை சொன்னார். இப்படி எந்த நடிகர் சொல்லுவார்?.. அதுதான் அஜித்’ என விஷால் கூறினார்.

இதையும் படிங்க: வெள்ளி விழா மட்டுமல்ல!. அதையும் தாண்டி ஓடிய மைக் மோகன் படங்கள்!. லிஸ்ட் இதோ!..

இப்போது, ஹரியின் இயக்கத்தில் ‘ரத்னம்’ என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.

ஹரியின் வழக்கமான மசாலா - செண்டிமெண்ட் - காதல் - காமெடி கலந்த கலவையாக உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story