என்னோட லக்கி சார்ம் அஜித்தான்! அவர வச்சு போட்ட விதை.. இன்று ஆலமரமா நிக்குது..பிரபலம் சொன்ன தகவல்

by Rohini |
ajith (2)
X

ajith (2)

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து கொண்டிருக்க நேற்று அங்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொண்டு படக்குழு தாயகம் திரும்பியிருக்கிறது.அதன் பிறகு ஐதராபாத்தில் ஒரு எட்டு நாள்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும் அதோடு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே முடிய இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் அஜித் நடிக்கும் படங்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது மாஸ் ஹிட்டாகி விடும். அதுவும் அவருக்காக சிம்பிளான நடனத்தில் அஜித்தை ஆட வைத்து அதை ஹிட்டாக்கி விடுகிறார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண். அஜித்தின் பெரும்பாலான படங்களுக்கு கல்யாண்தான் நடன இயக்குனர். இதை பற்றி கல்யாண் மேலும் சில தகவல்களை பகிர்ந்தார்.

உயிரோடு உயிராக படத்தின் மூலம்தான் நடன இயக்குனராக மாறினாராம் கல்யாண். அதுவும் அஜித்துடன்தான் அவரின் முதல் பயணம் ஆரம்பித்திருக்கிறது. இருந்தாலும் தீனா படத்தில் அமைந்த ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் அந்தப் பாடல் இன்று வரை ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்திருக்கிறது.

அதிலிருந்தே தொடர்ந்து அஜித்தின் எல்லா படங்களுக்கும் குறிப்பாக பில்லா, அமர்க்களம். வேதாளம், வீரம், துணிவு மற்றும் இப்போது உள்ள விடாமுயற்சி படம் வரை என கல்யாண் தான் நடனம் அமைத்துக் கொடுத்து வருகிறார். அதனால் அவரோட லக்கி சார்மாகவே அஜித் மாறியிருப்பதாக ஒரு பேட்டியில் கூறினார். இப்படி அஜித்தின் பாடல் ஹிட்டாவதற்கு கல்யாண் ஒரு காரணமாக இருந்தாலும் அஜித்துடன் அடிக்கடி பேசுவது கிடையாதாம்.

அஜித்தும் பல விஷயங்களில் பிஸியாக இருக்கிறார். நானும் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் அடிக்கடி பேசுவது கிடையாது. ஆனால் என்றைக்காவது அஜித் சாரே எனக்கு மெசேஜ் செய்து பேசுவார் என கல்யாண் கூறினார்.

Next Story