More
Categories: Cinema News Entertainment News latest news

வாய்ப்பு கேட்டு அஜித் வீட்டுக்கு போனேன் ஜாவ் ஜாவ்ன்னு சொல்லிட்டான் – மறைந்த சிவசங்கர் ஆதங்கம்!

மறைந்த நடன இயக்குனர் சிவசங்கர் அஜித் குறித்த தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடன இயக்குனர் சிவசங்கர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய இவர் கடந்த சில நாட்களுக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.

Advertising
Advertising

நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவரின் இறப்புக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வரலாறு திரைப்படத்தில் அஜித்திற்கு நடனம் கற்றுக்கொடுத்தது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய பழைய வீடியோ அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதையும் படியுங்கள்: என் Back-க்கு எத்தனை மார்க்? – சூடேத்திய நடிகை ஷிவானி நாராயணன்

அதில், சிவசங்கர் மாஸ்டர், ” நான் அஜித்திற்கு டான்ஸ் பண்ணி கொடுத்தேன். அதற்காக அவர் என்னை புகழ்ந்து பேசினார் அதை நான் இல்லைன்னு சொல்லல. ஆனால், இதுவரைக்கும் ஏதாவது படத்துல நடிக்கிறதுக்கு கூப்பிட்டாரா? நான் என்ன அவருக்கு கெடுதலா பண்ணேன்? அவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எனக்கு எத்தனை படங்கள் வரும்? அவர் வீட்ல சான்ஸிற்காக போய் நிக்குறேன். செக்கியூரிட்டி ஜாவ் ஜாவ்ன்னு சொல்லிட்டான் என கூறி கண் கலங்கினார். பரவாயில்லை அவர் நல்ல மனசு உள்ளவர் நல்லா இருக்கட்டும் என்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Published by
பிரஜன்