Cinema News
அக்காவுடன் தான் பஞ்சாயத்து!.. தங்கச்சியிடம் டச்சில் இருக்கும் தனுஷ்.. செளந்தர்யாவுக்கு தாராள மனசு தான்!
நடிகர் தனுஷ் குடும்பத்தில் இருந்து ஒருத்தரை ஹீரோவாக்கும் முயற்சியில் களமிறங்கிய நிலையில், டிடி3 என டிடி ரிட்டர்ன்ஸ் 3 இல்லைங்க தனுஷ் டைரக்ஷன் 3ம் அந்த படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், அந்த படம் தனுஷ் சொந்தமா யோசிச்சு உருவாக்கிய கதை இல்லை என்றும் டைட்டில் முதல் அனைத்தும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் தங்கை செளந்தர்யா ரஜினிகாந்திடம் ஆட்டையைப் போட்டது என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், செளந்தர்யா தான் அந்த கதையை பண்ண தனுஷிடம் கொடுத்திருக்கிறார் என்கின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவகாரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வரும் நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளின் படக்கதையை எப்படி எடுத்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: தல தலை மேலயே கை வச்சாரா பாலா?.. அதான் அஜித் கடுப்பாகி நான் கடவுள் படத்தில் இருந்து வெளியேறினாரா?..
பல ஆண்டுகளுக்கு முன்பு கோச்சடையான் படத்துக்கு பிறகு டைரக்டராகி அப்பா காசை காலி செய்வேன் என்கிற ஒரே குறிக்கோளுடன் இருந்த செளந்தர்யா ரஜினிகாந்த் அப்பவே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கப் போவதாக கொடுத்த பேட்டியை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
ஆனால், இத்தனை ஆண்டுகள் கழித்து அந்த படத்தை தான் தனுஷ் இயக்கப் போகிறாரா? டைட்டிலும் அதே தானே என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அக்காவை விவாகரத்து செய்தாலும் தங்கையுடன் இன்னமும் டச்சில் தான் இருக்கிறாரா தனுஷ் என்றும் செளந்தர்யா தான் டைட்டில் மற்றும் ஸ்க்ரிப்ட்டை தனுஷுக்கு கொடுத்து அந்த படத்தை பண்ணச் சொல்லியிருக்கிறார் என்று கூறுகின்றனர். அக்காவை போல இயக்குநராக செளந்தர்யா ரஜினிகாந்தும் ஆசைப்பட்டார். ஆனால், இரண்டாம் திருமணத்துக்கு பிறகு சினிமா, தயாரிப்பு என எதிலும் கவனம் செலுத்தாமல் இருக்கும் அவர், தனது பழைய கதையை தூசு தட்டி கதை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த தனுஷுக்கு கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சலாருக்கு சங்கு ஊதிய சபாநாயகன்!.. தமிழ்நாட்டுல பிரபாஸ் நிலைமை இப்படி கவலைக்கிடமா ஆயிடுச்சே பாஸ்!..
இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும், மலையாள நடிகர்களான அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.