Connect with us

Cinema News

தல தலை மேலயே கை வச்சாரா பாலா?.. அதான் அஜித் கடுப்பாகி நான் கடவுள் படத்தில் இருந்து வெளியேறினாரா?..

சியான் விக்ரம், சூர்யாவுக்கு எல்லாம் ஹிட் படங்களை கொடுத்து வந்த பாலா பக்கம் அப்பவே நடிகர் அஜித்தின் பார்வை பட்டது. தனக்கும் அப்படியொரு வெற்றிப் படம் கிடைத்தால் நல்லா இருக்குமே தேசிய விருது கிடைக்குமே என்றெல்லாம் ஆசைப்பட்டு பாலா இயக்கத்தில் நடிக்க நான் கடவுள் படத்தில் முதலில் கமிட் ஆனது அஜித் தான்.

ஆனால், தலை கீழாக நின்று யோகா செய்யணும் என காசிக்கு கூட்டிட்டுப் போய் பாலா ஒரு வாரம் படுத்திய கொடுமை தாங்கமுடியாமல் தப்பிச்சோம் பொழைச்சோம் என அப்போதே வணங்கான் சூர்யா மாதிரி பாதியில் எல்லாம் இல்லை ஆரம்பம் அஜித் மாதிரியே ஆரம்பத்திலேயே ஓடி வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: சலாருக்கு சங்கு ஊதிய சபாநாயகன்!.. தமிழ்நாட்டுல பிரபாஸ் நிலைமை இப்படி கவலைக்கிடமா ஆயிடுச்சே பாஸ்!..

இந்நிலையில், அஜித்தின் தலையில் பாலா இப்படி கை வைத்து குடிமியை பிடித்து இழுத்ததனால் தான் அஜித் டென்ஷன் ஆகி பாலாவும் வேண்டாம் அவர் படமும் வேண்டாம் என வெளியே வந்து விட்டார் என ஒரு போட்டோவை வைரலாக்கி வருகின்றனர். ஆனால், இது அஜித்தின் ரியல் போட்டோவே கிடையாது. உண்மையில் இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தான்.

அஜித் தலையில் பாலா அப்படி கை வைக்கவில்லை. ஆர்யாவின் தலையில் பாலா கை வைத்திருக்கும் போட்டோவை தான் அஜித்தின் ஹேட்டர்கள் தற்போது முகத்தை மாற்றி எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: நிருபர் வைத்த செக்..! புத்திசாலித்தனமாக பதில் சொல்லித் தப்பித்த பாலசந்தர்

அஜித் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், ஆரம்பத்தில் ஒரு பட்ஜெட் சொல்லி விட்டு பல ஆண்டுகள் அதிக பட்ஜெட்டில் படமெடுத்து வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு போதும் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் அந்த பக்கம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top