Connect with us
danush

Cinema News

பட்ஜெட்ட கேட்டா தலையே சுத்துது!.. ரசிகர்களை மெர்சலாக்கும் தனுஷின் புது பட அப்டேட்!…

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் நடிக்க துவங்கியவர் நடிகர் தனுஷ். துவக்கத்தில் அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

அதன்பின் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் நடிப்பதற்கு வாய்ப்புள்ள நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும், ஒருபக்கம் மசாலா படங்களிலும் நடித்து படிப்படியாக உயர்ந்தார். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதும் பெற்றார்.

இதையும் படிங்க: கொல பசியில் இருக்கும் தனுஷ்! மீண்டும் தீனி போடக் காத்திருக்கும் அந்த கில்லர் இயக்குனர்

ஒருபக்கம் ஹிந்தி, ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கமர்ஷியல் மசாலா படங்களில் நடித்தாலும் தன்னை ஒரு சிறந்த நடிகராக மெருகேற்றிக்கொண்டவர் இவர். ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான கேப்டன் மில்லர் படத்திலும் நடித்தார்.

இந்த படத்தை நடித்து முடித்துவிட்டு தற்போது தனது 50 வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடி வைத்திருந்த தனுஷ், திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுவிட்டு மொட்டை தலையுடன் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அட்வான்ஸ் எனக்கு!. ஆனா ஹீரோ நான் இல்ல!.. டெரர் தயாரிப்பாளரிடம் போங்காட்டம் ஆடும் தனுஷ்!..

இதற்கிடையில் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். அந்த படத்தை வேறு ஒரு நிறுவனத்துடன் இணைந்து தனுஷுன் ‘வொண்டர்பார்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாம். இந்த படம் ரூ.150 கோடி பட்ஜெடில் உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதுவரை தனுஷின் எந்த திரைபப்டம் இவ்வளவு பட்ஜெட்டில் உருவானது இல்லை. எனவே, பிரம்மாண்டமாக உருவாகபோகும் அந்த படத்தின் மீது தனுஷ் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதையும் படிங்க: தனுஷ், கமலை விட ப்ளேபாயாக சுற்றி வந்த ரஜினி.. இவரின் வலையில் இத்தனை நடிகைகளா? ஷாக்!

google news
Continue Reading

More in Cinema News

To Top