அந்த நடிகர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்.. சொன்னது தனுஷ்.. இது எப்ப தெரியுமா?...

by சிவா |   ( Updated:2023-02-14 05:48:16  )
danush
X

தமிழ் சினிமாவிலும், ரசிகர்களிடையேயும் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பெரிய டாப்பிக்கே அடுத்து யார் சூப்பர்ஸ்டார் என்பதுதான். வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டியில் ‘அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான்’ என கொளுத்திப்போட அது திரையுலகில் பற்றிக்கொண்டது. விஜய் ரசிகர்கள் எல்லோரும் விஜய்தான் சூப்பர்ஸ்டார் என பேச துவங்க, ஒருபக்கம் ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் ஒருவருக்கு மட்டுமே.. அது எங்கள் தலைவர் ரஜினி மட்டுமே என பேசினர். இன்னும் அந்த பஞ்சாயத்து ஓயவில்லை.

rajini

rajini

ஆனால், ஒரு நடிகரை இவர்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பல வருடங்களுக்கு முன்பே தனுஷ் சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?. ஆனால், இது நடந்தது பல வருடங்களுக்கு முன்பு. இந்த தகவலை தனுஷின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான வெற்றிமாறனே கூறியுள்ளார்.

siva

siva

ஒரு விழாவில் பேசிய வெற்றிமாறன் ‘ஒருமுறை தனுஷ் என்னை தொலைப்பேசியில் அழைத்து. உங்கள் உதவியாளர்களிடம் ஒரு காமெடி கதை இருந்தால் என்னிடம் அனுப்புங்கள் என்றார். நான் ‘நீங்கள் காமெடி செய்யப்போகிறீர்களா?’ எனக்கேட்டேன். எனக்கு இல்லை சிவகார்த்திகேயனுக்கு என்று சொன்னார். சிவகார்த்திகேயனை வச்சு படம் எடுக்க போகிறீர்களா? எனக்கேட்டேன். அதற்கு தனுஷ் ‘சார். அவர் நல்ல திறமையான நடிகர். சூப்பர்ஸ்டார் ஆகும் அளவுக்கு அவருக்கு திறமை இருக்கு’ என புகழந்து பேசினார். என வெற்றிமாறன் பேசினார்.

siva

siva

துவக்கத்தில் தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்களாகத்தான் இருந்தனர். தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய திரைப்படங்களை தனுஷ் தயாரித்தார். ஆனால், சில காரணங்களால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் தற்போது பேசிக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இது பாலில் விழுந்த பலாப்பழம்!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் பிரியங்கா மோகன்…

Next Story