என் விவாகரத்துக்கு காரணம் இந்த நிகழ்ச்சி தான்... டிடியால் கண்ணீர் விட்ட அர்ச்சனா...
விஜே அர்ச்சனா தனது யூ டியூப் தளத்தில் நவராத்திரிக்கு ஒரு புது நிகழ்ச்சியை துவங்கி இருக்கிறார். அதில் கலந்து கொண்ட பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தனது வாழ்க்கையில் நடந்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
தொகுப்பாளர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் அர்ச்சனா. சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரிய அளவிலான நெகட்டிவ் விமர்சனங்களை வாங்கி வந்தார். தொடர்ந்து அவரது யூ டியூப் தளத்தில் வீட்டின் பாத்ரூம் டூரை போட்டு பரபரப்பை கிளப்பினார். தற்போது, நவராத்திரிக்கு வித்தியாசமான நிகழ்ச்சியை துவங்கி இருக்கிறார். பிரபல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கை குறித்து பேச இருக்கிறார்கள். அதில் முதல் ஆளாக தொகுப்பாளர்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் திவ்யதர்ஷினி கலந்து கொண்டார். அதன் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
டிடி தனது சொந்த வாழ்க்கை முதல் தனது தொலைக்காட்சி பயணம் வரை பலவற்றை மனம் திறந்து பேசி இருக்கிறார். அதிலும் இவரின் விவகாரத்து குறித்து முதல் முறையாக கூறி இருக்கிறார். அந்த வீடியோவில், சின்ன வயதில் என் தந்தையை இழந்தேன். அப்போது வருத்தமாக இருந்தது. ஆனால், அவரின் பல கடமைகளை தான் தற்போது செய்து விட்டேன். என் குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். டிடி தனது தந்தை குறித்து பேசுவதை கேட்ட அர்ச்சனாவும் கண்ணீர் சிந்தினார்.
இதையும் படிங்க: நானே பெரிய ப்ராங்க்ஸ்டர்தான் தெரியுமா… அர்ச்சனாவிற்கே அல்வா கொடுத்த முன்னணி இயக்குனர்!
காபி வித் டிடி நிகழ்ச்சியில் தான் என் விவகாரத்து தகவல் எனக்கு கிடைத்தது. ரம்யாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருந்தார். நான் நிகழ்ச்சிக்கான முதல் லீடை சொல்ல இருந்த சமயம், எங்களுக்குள் இது சரி வராது. விவகாரத்துக்கு செல்ல வேண்டும் என்ற தகவல் கிடைத்தது. அதிலும், எனக்கு தான் அதிக பாதிப்பு. காரணம் நான் தான் மீடியாவில் இருக்கிறேன். அதை எனக்கே கூறிக்கொண்டேன். நாம் தான் லைம்லைட்டில் இருக்கிறோம். தைரியமாக இருக்க வேண்டும் எனச் சொல்லிக்கொண்டே நிகழ்ச்சிக்குள் சென்றேன் எனக் கூறி இருக்கிறார். அங்கே தான் வாழ்க்கை துவங்கியது அங்கேயே அது முடிந்தும் விட்டது எனத் தெரிவித்தார்.
இதே நிகழ்ச்சியின் போது, டிடியின் திருமணம் கோலாகலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. நிறைய திரை பிரபலங்கள் முதல் சின்னத்திரை பிரபலங்கள் வரை அதில் கலந்து கொண்டனர். டிடியின் வருங்கால கணவர் மற்றும் டிவி தொகுப்பாளர்கள் கலந்து கொண்டு புது மணத்தம்பதிகளை காபி வித் டிடி நிகழ்ச்சியில் வாழ்த்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.