டிடியால் கதறி அழும் சகோதரி! கடைசில என் மடியிலேயே கைவச்சிட்டீங்களே – ஐயோ இப்படி ஆகிப் போச்சே

Published on: February 19, 2024
dd
---Advertisement---

Anchor: விஜய் டிவியில் பல ஆண்டுகள் தொகுப்பாளினியாக இருந்தவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சியையும் பெரும்பாலும் டிடிதான் தொகுத்து வழங்கி வந்தார். தொகுப்பாளர்களில் அதிக மக்கள் செல்வாக்கு பெற்றவராகவும் டிடி இருக்கிறார்.

இப்படி பல நிகழ்ச்சிகளை பல ஆண்டுகள் நின்று கொண்டே தொகுத்து வழங்கியதால் காலில் ஏதோ ஒரு கோளாறு ஏற்பட இப்போது டிடி எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் சேரில் அமர்ந்து கொண்டுதான் செய்து வருகிறார். அதுவும் பெரிய பெரிய பட்ஜெட் படங்களின் இசை வெளியீட்டு விழாவை மட்டுமே டிடி தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் படிங்க: இதனாலதான் உன் படத்துக்கு மியூசிக் போடல!.. எடக்கு மடக்கு பார்த்திபனையே மடக்கிய இளையராஜா..

இந்த நிலையில் டிடிக்கு திருமணமாகி மாமியார் மற்றும் கணவருடன் பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் திடீரென டிடியின் இன்ஸ்டா பக்கத்தில் அவருடன் ஒருவர் இருக்கும் சில புகைப்படங்கள் வைரலாகி வந்தன.

அதை பார்த்த ரசிகர்கள் ஒரு வேளை டிடி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? பெரிய தொழிலதிபராமே என்றெல்லாம் பேசி வந்தார்கள். இது டிடிக்கும் அவருடைய சகோதரி குடும்பத்திற்கும் பெரிய ஷாக்கிங்காக இருந்திருக்கிறது.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசையில் மீனா-முத்து மெயின் இல்லையா? சைட் ஜோடிக்கு ஓவர் லவ் சீனா இருக்கே…

ஏனெனில் டிடியுடன் இருப்பது அவரது சகோதரியின் மகனாம். வெளி நாடு நிகழ்ச்சிக்கு செல்லும் போது தனக்கு உதவியாக தன் அக்கா மகனை அழைத்து சென்றாராம் டிடி. இதை குறிப்பிட்டு பேசிய பயில்வான் ரெங்கநாதன் கடைசியில் அக்கா மகனை டிடியுடன் தொடர்பு படுத்திட்டாங்களே? இதை கேட்டு டிடியின் அக்காவான பிரியதர்ஷின் கதறி அழுதார் என்றெல்லாம் பயில்வான் கூறினார்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.