அஜித் பேசுனா மட்டும் இனிக்குது! விஜய் பேசுனா கசக்குதா? அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தல மேல கை வச்சாச்சா?

ajith
Vijay Dialogue in Leo: இன்று இணையத்தில் பெரும் பேசு பொருளாக இருப்பது லியோ படத்தில் விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தைதான். அரசியல் முக்கிய பிரமுகர்களில் இருந்து சாதாரண கவுன்சிலர் வரைக்கும் அனைவரும் இந்த வசனத்திற்காக கண்டனக் குரலை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் விஜய் இதற்காக பொது மக்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இது முழுக்க முழுக்க வன்மம்தான் என பிரபல அரசியல் விமர்சகர் துரைமுருகன் கூறியிருக்கிறார். மேலும் விஜய் இதை ஒரு பொதுமேடையிலோ அல்லது பெண்கள் கூடியிருக்கும் ஒரு இடத்திலோ பேசவில்லை. அப்படி பேசியிருந்தால் அந்த வார்த்தையை திரும்ப பெறச் சொல்லி வாதாடலாம். அந்தப் படத்தின் கருவுக்கு அதை தேவைப்பட்டிருக்கலாம். அதனால் அந்த வார்த்தையை லோகேஷ் வைத்திருக்கலாம். படம் வந்த பிறகு தெரியும்.
இதையும் படிங்க: எலி பட இயக்குநரின் இந்த படம் வென்றதா? கொன்றதா?.. இறுகப்பற்று விமர்சனம் இதோ!..
இந்த வார்த்தை ஒன்றும் விஜய் மட்டும் பேசவில்லை. திராவிட மேடையிலேயே இந்த வார்த்தை பேசப்பட்டிருக்கிறது. அதாவது பெரியார் ஒரு மேடையில் அண்ணாவை பார்த்து நீங்கள் எல்லாம் வேசிகளின் பிள்ளைகள் என்று சொன்னாராம். அதற்கு அண்ணா நாங்கள் வேசிகளின் பிள்ளைகள் என்றால் அவர்தான் எங்களுக்கு அப்பா என்று கூறினாராம். இப்படி பல ஆபாச கருத்துக்கள் திராவிட மேடையில் உலா வந்திருக்கிறது என கூறினார்.
அதுமட்டுமில்லாமல் விஜய் மட்டுமா சினிமாவில் பேசினார்? என்னை அறிந்தால் படத்தில் அஜித் கூடதான் பேசினார். ஏன் மங்காத்தா படத்திலும் லட்சுமி ராயை சுடுவதற்கு முன் இந்த வார்த்தையைக் கூறிவிட்டுதான் சுட்டிருப்பார். அதனால் அஜித் ரசிகர்கள் என்ன கெட்டா போய்விட்டார்கள்?
இதையும் படிங்க: லியோ 9 மணி காட்சியும் இல்லையா?!.. இப்படி கேப்பு விடாம அடிச்சா எப்படி?!.. பாவம் விஜய் ஃபேன்ஸ்!..
அவர் செய்யும் நல்ல செயல்களைத்தானே எடுத்துக் கொண்டார்கள். வடசென்னை படத்தில் இடம்பெறாத கெட்ட வார்த்தைகளே கிடையாது. சும்மா புகுந்து விளையாடியிருப்பார் வெற்றிமாறன். அதனால் வெற்றிமாறன், தனுஷ் இவர்களால் இந்த சமூகம் சீரழிந்து விட்டதா?
மேலும் விடுதலை படத்தில் ஒரு போலீஸ் பேசக் கூடாத ஒரு தகாத வார்த்தையை பேசியிருப்பார். அதை ஒன்றும் சென்சார் கட் செய்யவில்லையே. அதனாலும் இந்த சமூகம் கெட்டுப் போய்விட்டதா? இப்படி எல்லாரையும் விட்டுவிட்டு விஜயை மட்டும் மன்னிப்பு கேட்க சொல்லுவது முற்றிலும் வன்மம் என துரை முருகன் கூறினார்.
இதையும் படிங்க: லியோவுக்கு முன்னாடியே கல்லா கட்டுவாரா திரிஷா?.. தி ரோட் திரைப்படத்தின் விமர்சனம் இதோ!..
ஏனெனில் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்படுகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். அதனால் இது பிடிக்காத சிலர் எப்படியாவது இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என எண்ணினார்கள். ஆனால் நடக்கவில்லை. அதனால்தான் விஜய்க்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் என்று துரை முருகன் கூறினார்.
ஆனால் விஜய் சிகரெட் பிடிக்கக் கூடாது என்பதுதான் தனது வாதம் என்றும் அதனால் அவரை பின் தொடரும் ரசிகர்கள் கண்டிப்பாக நாமும் சிகரெட் பிடித்துப் பார்ப்போம் என்று இறங்குவார்கள். அதனால் அதை மட்டும்தான் விஜய் செய்யக் கூடாது என கூறினேன் என்றும் துரைமுருகன் கூறினார்.