More
Categories: Cinema News latest news

மிரட்டலாக எண்ட்ரி கொடுக்கும் ஹரால்ட் தாஸ்… லியோ படத்தில் அர்ஜூன் இவருக்கு தம்பியா?

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்த சேதி தான். அந்த வகையில் இன்று அவரின் பிறந்த நாளினை முன்னிட்டு லியோ படத்தில் அவரின் கதாபாத்திரம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் என எக்கசக்க சினிமா பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இன்று ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ஹாரால்ட் தாஸ் வருவதாக செவன் ஸ்கீரின் ஸ்டியோஸ் தரப்பில் இன்று ட்வீட் போடப்பட்டு இருந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ரோலெக்ஸுக்கே டஃப் கொடுக்கும் ஹரோல்டு தாஸ் அர்ஜூன்.. மிரட்டலான லியோ க்ளிம்ஸ் வீடியோ

அதை தொடர்ந்து மாலை வெளியான ஹரால்டு தாஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்டிங்காகி இருக்கிறது. மிகப்பெரிய கூட்டத்தில் அர்ஜூன் ஒருவரை வெட்டி விட்டு திரும்புவது போல வீடியோ வெளியாகி இருக்கிறது. இதில் அர்ஜூன் முகத்தில் தழும்புகள் இருப்பது போல காட்சிகள் இருக்கிறது.

இப்படத்தில் சஞ்சய் தத்தின் பெயர் அந்தோணி தாஸ், தற்போது அர்ஜூன் பெயர் ஹரால்டு தாஸ் என்பதால் இருவரும் அண்ணன், தம்பியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தாஸ் அண்ட் கோ நிறுவனம் இவர்களுடையதாக தான் இருக்கும்.

இதையும் படிங்க: காதலியை அறிமுகம் செய்து வைத்த விக்ரம் பட நடிகர்.. பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

நான் ரெடி பாட்டில் விஜயுடன், சஞ்சய் தத்தும் உடன் இருப்பதால் விஜயும் இவர்களின் தம்பியாக இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் விஜயின் முழுபெயர் லியோ தாஸாகவும் இருக்கலாம் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் மக்களிடம் தேசப்பற்றினை உரம் போட்டு வளர்த்த நடிகர்களில் முக்கிய இடம் அர்ஜூனுக்கு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். அவர் நடிப்பில் வெளிவந்த ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், ரிதம் போன்ற படங்கள் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தினை அமைத்தது.

பல வருடமாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த அர்ஜூன் சமீபகாலமாக வில்லனாக நடித்து வருகிறார். அதிலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கலாம் என தெரிகிறது. இந்த பிறந்தநாள் உண்மையிலேயே அர்ஜூனுக்கு ஸ்பெஷல் தான்!

Published by
Akhilan

Recent Posts