Connect with us
nagesh

Cinema History

சரோஜாதேவிக்கும் நாகேஷுக்கும் இடையிலே இப்படி ஒரு நட்பா?.. கேட்டாலே ஆச்சரியப்படுவீங்க!..

தமிழ் சினிமாவில் சரோஜாதேவி ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர் ஏற்று நடித்த ஒரு சில கதாபாத்திரங்கள் தான். பானுமதி – அஞ்சலி, பத்மினி- சாவித்ரி என பலம் வாய்ந்த நடிகைகளை வந்த குறுகிய காலத்தில் பின்னுக்குத் தள்ளி தன்னுடைய முத்திரையை பதித்தார் சரோஜாதேவி.

அவர் நடித்த படங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம்தான். ஸ்ரீதர் இயக்குனராக அறிமுகமான படமும் கல்யாணப்பரிசுதான். இந்தப் படத்தில் வசந்தி என்ற கதாபாத்திரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் குடி பெயர்ந்தார் சரோஜாதேவி.

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார் சரோஜாதேவி. முதன் முதலில் மணாளனே மங்கையின் பாக்கியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சரோஜாதேவிக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்த படமாக நாடோடி மன்னன் படம் அமைந்தது.

இப்படி பல படங்களில் நடித்து மக்கள் மனதை குறுகிய காலத்தில் வென்றவர். மேலும் தமிழ் சினிமாவில் எம்ஜிஆருடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகளில் சரோஜாதேவியும் ஒருவர். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிக படங்களில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்த பெருமை இவரையே சேரும்.

இந்த நிலையில் சரோஜா தேவி பற்றியும் நாகேஷ் பற்றியும் சித்ரா லட்சுமணன் ஒரு தகவலை பகிர்ந்தார். அதாவது நல்லிகுப்பம் செட்டியார் என்பவர் நாகேஷ் எழுதிய சிரித்து வாழ வேண்டும் என்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு சரோஜா தேவியை அழைக்க வந்தாராம்.

தமிழ் நாட்டிலே கலாச்சார பிரதிநிதியாக இருக்கக் கூடிய அனைவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் இந்த நல்லி குப்பம் செட்டியார். எந்த நாளில் புத்தக வெளியீட்டு விழா வைத்திருந்தார்களோ அதே நாளில் சரோஜா தேவி லண்டன் செல்ல நேர்ந்ததாம். ஆனால் சரோஜா தேவி லண்டன் செல்லவில்லையாம். காரணம் நாகேஷ் மீது சரோஜா தேவி வைத்திருந்த மதிப்பும் நட்பும் தான் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

சரோஜா தேவியும் நாகேஷும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றனர். அதனால் அவர்களுக்குள் ஒரு ஆழமான நட்பு இருந்தே வந்ததாம். அதனால் தான் லண்டன் செல்வதையும் நிறுத்தி விட்டு அந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு சரோஜாதேவி வந்தாராம்.

இதையும் படிங்க : எப்பா இது வேற லெவல் காம்போவால இருக்கு!.. கமலுக்கு ஜோடியாக அஜித் பட நடிகை?..

google news
Continue Reading

More in Cinema History

To Top