கலைஞர் நூற்றாண்டு விழாவில் அஜித்? புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த தல

Published on: January 5, 2024
ajith
---Advertisement---

Actor Ajith: கோலிவுட்டின் கிங் அஜித் இப்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். நாளுக்கு நாள் அஜித் பற்றிய பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது. விஜயகாந்த் மறைவிற்காவது அஜித் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் வரவில்லை.

அதற்கான காரணத்தையும் ஒரு பிரபல சினிமா பத்திரிக்கையாளர் கூறினார். விஜயகாந்த் மறைவிற்கு இரண்டு தினங்களுக்கு  முன்புதான் அஜித் காலில் விபத்து ஏற்பட்டதாம். சண்டைக் காட்சியில் ஈடுபட்டிருக்கும்  போது இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: பெட்டியை தூக்கிய பூர்ணிமா! சமூக வலைதளத்தில் கிழித்துத் தொங்கவிட்ட பிரதீப் – இன்னும் இவர் அடங்கலயா?

அதனால் மூன்று நாள்கள் அஜித் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாக இருந்ததாம். இதற்கிடையில் திடீரென அஜித் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகி ரசிகர்களின் எரிச்சலுக்கும் ஆளாக்கியது. கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த நேரமில்லை.

ajith
ajith

ஆனால் அங்கு குத்தாட்டம் போட மட்டும் நேரம் இருக்கிறதா என்று பல கேள்விகள் அவர் முன் வைக்கப்பட்டன. நேற்று முன் தினம் தான் அஜித்தின் மகள் அனோஷ்காவின் பிறந்த நாள். அதை குடும்பத்துடன் அஜித் துபாயில் கழித்தார்.

இதையும் படிங்க: ஸ்டேஜில் இந்த பெர்ஃபாமன்ஸ் தேவையா!… நல்லா பண்ணுறீங்க மில்லர் ஐயா! மொக்கை பண்ணிய பிரபலம்!

இந்த நிலையில் நாளை நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அனைவரும் இந்த விழாவிற்கு வருகை தரவேண்டும் என நடிகர் சங்கம் சார்பாகவும் தயாரிப்பாளர் சங்கம் சார்பாகவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ரஜினி, கமல் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். விஜய்க்கு சென்னையில் தான் படப்பிடிப்பு என்பதால் அவர் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அஜித் வருவாரா? மாட்டாரா? என்ற சந்தேகத்திற்கு ஒரு புகைப்படத்தை போட்டு அஜித் முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஒரே படத்தோடு காணாமல் போன நடிகர் இவர் தான்… அப்புறம் என்ன ஆனார் தெரியுமா?

அவர் புகைப்படத்தை வெளியிட்டு அஜர்பைஜானுக்கு சூட்டிங் கிளம்பு அஜித். குடும்பம் சென்னையை அடைந்தது என்ற கேப்ஷனில் அந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அதனால் நாளை நடக்கவிருக்கும் விழாவில் அஜித் இருக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.