காமெடி, குணச்சித்திரம், வில்லன் என்று தமிழ்சினிமா உலகில் பல ஆண்டுகளாக கலக்கிய பிரபல நடிகர் டெல்லிகணேஷ் மறைந்தது தமிழ் சினிமா உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
பிரதமர் மோடி இரங்கல்
அவரது மறைவிற்கு பிரதமர் மோடியே இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தவகையில் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பது இப்போதுதான் தெரிகிறது.
அவரது மகன் மகாதேவன் தந்தை கொடுத்த டாஸ்க் பற்றியும், தனக்கு சொல்லித்தராத அந்த விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
3 படத்துல குக்
விருதுகளைப் பத்திக் கவலைப்படாத ஆளு. ஒரு வருஷத்துக்கு 22 படங்களில் நடிச்சிக்கிட்டு இருந்தாரு. லேட்டஸ்டா கரு.பழனியப்பன் சார் அப்பாவைப் பத்தி ஆர்ட்டிக்கிள் எழுதும்போது 3 படத்துல குக்கா நடிச்சிருக்காரு.
மூணுமே வேற வேற. சமையல்காரராகத் தான் நடிச்சிருப்பாரு. ஆஹா, புன்னகை மன்னன், அவ்வைசண்முகின்னு 3 படத்திலுமே வேற வேற தான். அவ்வளவு நடிச்சும்கூட விருதுகளைப் பத்தி எங்கக்கிட்ட எதுவும் பேசியது கிடையாது.
குறும்படங்கள்
குறும்படங்கள் நிறைய எடுத்துப்பார்த்தால் அதுல எங்க அப்பா தான் இருப்பாரு. பிரதீப் ரங்கநாதனின் குறும்படத்திலும் நடிச்சிருக்காரு. நடிப்பதற்கு ஆப்சர்வேஷன் ரொம்ப முக்கியம். ஒருமுறை சொந்த ஊருக்கு எல்லாரும் காருல போயிட்டாங்க.
டாஸ்க்
என்னை மட்டும் அப்பா பஸ்ல வரச்சொன்னாரு. வல்லநாட்டுக்கு வர்ற வரைக்கும் ஒவ்வொரு பஸ்லயும் எப்படிப்பட்ட ஆள்கள் ஏறுறாங்க? அவங்க மேனரிசம் என்ன? பாடி லாங்குவேஜ் என்னன்னு கவனி.
வீட்டுக்கு வந்ததும் அவங்கள்ல யாராவது ஒருத்தர் மாதிரி பண்ணிக் காட்டணும்னு சொன்னாரு. ஏன் இப்படி ஒரு டாஸ்க் கொடுக்காருன்னு நினைச்சேன். இப்போ யோசிச்சிப் பார்த்தா அது எவ்வளவு பெரிய அட்வைஸ். அந்த வயசுல நமக்குப் புரியாமப் போச்சேன்னு தோணுது.
அப்பா சொல்லித்தரல
Also read: Pradeep: சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திய ‘லவ் டுடே’ நாயகன்… இதத்தான் நேரம்னு சொல்றது! ..
அப்பா அப்படி நிறைய சொல்லிருக்காரு. முக்கியமா அவர் சொல்றது சூட்டிங்கிற்கு நேரத்தோட போகணும் என்பது தான். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்த அப்பா, அவரு இல்லாம இருக்கும்போது எப்படி வாழணும்னு சொல்லித்தரல. அதையும் இனி தான் கத்துக்கணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஞானவேல் ராஜா…
தயாரிப்பாளர் ஞானவேல்…
இன்று தமிழ்…
Siruthai siva:…
கங்குவா படத்தில்…