ஷாருக்கானுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த டெல்லி கணேஷ்!.. அதுவும் எந்த படத்துல தெரியுமா?!..

by ramya suresh |
delhi ganesh
X

delhi ganesh

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு டெல்லி கணேஷ் அவர்கள் தமிழ் சொல்லிக் கொடுத்தாராம்.

தமிழ் சினிமாவில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்த டெல்லி கணேஷ் பாலச்சந்தர் இயக்கத்தில் பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தில் நடித்து முதல் முதலாக நடிகராக அறிமுகமானார். சினிமாவில் நடிப்பது மிகவும் பிடித்து போன காரணத்தால் தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கமலஹாசனுடன் இணைந்து நாயகன், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். கமலஹாசன் மட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன் திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் முதுகில் பல பேர் குத்தியிருக்கிறார்கள்! பிரபலம் சொன்ன தகவல்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களுடன் இணைந்து நடித்து மிகப் பிரபலமானவர் டெல்லிகணேசன். இவர் கடைசியாக இந்தியன் 2, அரண்மனை 4 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியிருந்தார். 80 வயதிலும் சினிமாவில் நடித்து வந்த டெல்லி கணேசன் மறைவு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவர் கடந்த நவம்பர் 10-ம் தேதி உயிரிழந்தார். இவரின் உயிரிழப்புக்கு ஏராளமான பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தார்கள். மேலும் பலரும் இவர் பிறருக்கு செய்த உதவிகள் மட்டும் சினிமாவில் இவர் ஆற்றிய பங்கு என அனைத்தையும் நினைவு கூர்ந்து இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு விமானத்துறையில் பணியாற்றிய காரணத்தினால் விமானப்படையினர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்திருந்தார்கள்.

இந்நிலையில் அவர் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் ஹிந்தியில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கின்றார் நடிகர் டெல்லி கணேஷ். அந்த வகையில் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் சத்யராஜ் உள்பட தமிழர்கள் கூடி நிற்கும் இடத்தில் ஷாருக்கான் இந்தியில் பேசி தமிழ் வார்த்தையோடு அந்த டயலாக்கை முடிக்க வேண்டும்.

இதையும் படிங்க: நயன் – விக்கி காதலுக்கே நான்தான் காரணம்!.. ரகசியத்தை லீக் செய்த மிர்ச்சி சிவா!…

அந்த சமயத்தில் அட போங்கய்யா என்று சொல்லலாம் என ஷாருக்கானுக்கு டெல்லி கணேஷ் அவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கின்றார். அதையும் தட்டாமல் ஷாருக்கான் அதன் அர்த்தத்தை கேட்டுக் கொண்டு நடித்து முடித்தாராம். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story