நயன் - விக்கி காதலுக்கே நான்தான் காரணம்!.. ரகசியத்தை லீக் செய்த மிர்ச்சி சிவா!...

by சிவா |
nayanthara
X

#image_title

Nayanthara: கேரளாவை சேர்ந்த நயன்தாரா ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அடுத்த படமே சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன்பின் பல வருடங்கள் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடினார். அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படத்தில் பிகினி உடையில் வந்து அதிரவைத்தார்.

நடிகர் சிம்புவை காதலித்தார். இருவரும் சேர்ந்து வல்லவன் படத்தில் நடிக்கும்போதுதான் இருவருக்கும் இடையே காதல் உருவானது. அதன்பின் அது பிரேக்கப் ஆகிவிட்டது. அதன்பின் வில்லு படத்தில் நடிக்கும் போது அப்படத்தின் இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார். அவரை திருமணம் செய்வதற்காக இந்து மதத்திற்கும் மாறினார்.

இதற்கு பிரபுதேவாவின் முதல் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை சமாதானம் செய்ய நயன்தாரா முயன்றும் முடியவில்லை. சில சினிமா விழாக்களில் பிரபுதேவாவும், நயனும் கணவன் மனைவி போலவே வலம் வந்தார்கள். அதன்பின் அந்த காதலும் பிரேக்கப் ஆனது.

அதன்பின் நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். சில வருடங்கள் இருவரும் காதல் ஜோடியாக ஊரை சுற்றி வந்தனர். அதன்பின் 2022ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இருவரும் பெற்றோராக மாறினார்கள்.

mirchy siva

இப்போது சினிமாவில் நடிப்பது, சொந்தமாக தொழில் செய்வது, குழந்தைகளை கவனித்துக்கொள்வது என பிஸியாக இருக்கிறார் நயன்தாரா. ஒருபக்கம் விக்னேஷ் சிவன் லவ்டுடே பிரதீப்பை வைத்து எல்.ஐ.கே. என்கிற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் தனுஷுடன் நயன் போட்ட சண்டையும் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் மிர்ச்சி சிவா ஊடகம் ஒன்றில் பேசிய போது ‘நானும் ரவுடிதான் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்குதான் வந்தது. நான் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் கண்டிப்பாக நயன்தாரா எனக்கு ஜோடியாக நடித்திருக்க மாட்டார். அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை எனில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவை பார்த்திருக்கவே மாட்டார். இருவருக்கும் திருமணமே ஆகியிருக்காது. எனவே, இன்னைக்கு விக்னேஷ் சிவன் இவ்வளவு ஹேப்பியாக இருப்பதற்கு நான்தான் காரணம்’ என ஜாலியாக பேசினார்.

இதையும் படிங்க: ஒரே குஷி போலயே!.. அஜித் படத்துக்கு செம வைபில் BGM போடும் அனிருத்.. வைரலாகும் வீடியோ!..

Next Story