400 படங்கள், 47 வருடங்களுக்கு மேல் சினிமாவில் பயணித்தவர். ரொம்ப அருமையான நடிகர். அவர் தான் டெல்லிகணேஷ். கமல், ரஜினி, அஜீத், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். இவர்களில் கமல் பற்றி என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
கமலுக்கு மைனஸ்னு ஒண்ணுமே கிடையாது. ஆனா ஒர்க் கரெக்டா இருக்கணும். அவருக்கு வந்து எல்லாம் தெரியும். டைரக்ஷன், பைட், எடிட்டிங் எல்லாமே தெரியும். அதனால ஏதாவது சின்ன தப்பு எதாவது இருந்தா ஏய் னு அந்த ஒரு வார்த்தையைப் பேசுவாரு. எல்லாரும் ஆடிப்போயிருவாங்க.
ஆனா ரொம்ப எளிமையானவர். ஹேராம் படத்துல நடிச்சேன். அப்ப என்னைக் கூப்பிட்டுக் கேட்டாரு. சார் உங்களுக்கு இந்தி தெரியுமான்னு? இந்தி தெரியும். ஆனா ரொம்ப பெரிய டயலாக்கா கொடுத்தா எனக்கு ரொம்ப கஷ்டம். கொஞ்சம் சின்ன டயலாக்கா இருந்தா பரவாயில்ல.
அப்ப ஒரு டயலாக்கக் கொண்டு வந்தாங்க. பேசிருவேன்னு சொன்னேன். ஆனா சார் ஒரு சின்ன ஹெல்ப். இந்த டயலாக்க நீங்க பேசி ரெகார்டு பண்ணித் தந்தா போதும். நான் பேசிருவேன்னு சொன்னேன்.
அதே மாதிரி தந்தாரு. அம்ஜத்கான் மாதிரி பேசணும்னு சொன்னாரு. அப்ப எனக்குத் தைரியத்தைக் கொடுத்து இப்படி பேசுங்கன்னாரு. அப்ப ஷாருக்கான் இருந்தாரு.
அவருக்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சாரு. இவரு தமிழ்நாட்டோட சிறந்த குணச்சித்திர நடிகர். சாக்ஷி 420… அது அவ்வை சண்முகி. அதுல ஓம்புரி வேடத்துல நடிச்சவரு இவரு தான்னு சொன்னாரு. ஓ ஐ சீ ன்னாரு ஷாருக்கான். அப்படி எல்லாம் ரொம்பப் பாராட்டுனாரு.
உடனே நான் அவரைப் பத்தி பாராட்ட ஆரம்பிச்சேன். போதும். என்னைப் பத்தி அவருக்குத் தெரியும். உங்களைப் பத்தி தெரியாது. நீங்க பேசாம இருங்கன்னுட்டாரு. சரி சார்னுட்டேன்.
டெல்லிகணேஷ் சார் நடிக்கும்போது கமல் சார் பாராட்டுவாரு. நாயகன் படத்துல நடிக்கும்போது நான் நல்லா பண்ணல. முதல் நாள். ஐயர் கேரக்டர். அவரு அப்படியே பார்த்துட்டே இருந்தாரு. ரெண்டாவது வந்து சார் உங்களுக்குக் கதை தெரியுமா?
தெரியாது சார்னேன். அது எனக்குத் தெரியுது. ஏன்னா நீ பண்ற ஆக்டிங் அந்த மாதிரி இருக்கு. உன் கேரக்டர் என்னன்னா அப்படின்னு சொன்னாரு. நாலே லைன்ல சொன்னாரு. ஆனா நான் படம் முழுவதும் மெயிண்டைன் பண்ணுனேன்.
அதனால இந்தக் கேரக்டர் நின்னுச்சு. நீங்க வந்து ஒரு ஏழை பிராமிண். தாராவில வாழறீங்க. உங்களுக்கு இருக்குற பிளஸ் பாயிண்ட் இந்தி. கொஞ்சம் நேர்மையான ஆளு. அவ்வளவு தான்.
இது மூலமா நீங்க வந்து பெரிய தாதா. வேலுநாயக்கர் அவருட்ட போயி பிரண்ட்டா ஆயிடுறீங்க. நீங்க இப்ப என்ன சொன்னாலும் அவரு கேட்பாரு. அவரு கேட்பாரேன்னு நீங்க எதுவும் சொல்ல மாட்டீங்க.
அந்த டயலாக் தான்… அவரு என்ன சொன்னாலும் நான் கேட்பேன். ஆனா நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதை அப்படியே ஃபாலோவ் பண்ணுனேன். அப்புறம் திடீர்னு பார்த்தா நான் பக்கத்துல வருவேன். உடனே திரும்பிப் போயிடுவேன். அந்த மாதிரி. அது எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது. காரணம் மணிரத்னம் தான்.
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…
தமிழ் சினிமாவில்…
ரஹ்மான் மற்றும்…
நடிகர் சிம்பு…