Connect with us
rajini

Cinema History

இந்த கிளைமேக்ஸ் தேறாது!.. ரஜினியிடமே சொன்ன சீனியர் நடிகர்!. அத மட்டும் கேட்டிருந்தா!..

Baba movie: நடிகர் ரஜினிகாந்த் எப்படிப்பட்ட நடிகர்.. அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் எவ்வளவு?.. சினிமாவில் அவரின் அனுபவம் என்ன? என்பது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரியும். பாட்ஷா படத்தின் கதையையே அமிதாப்பச்சன் நடித்த ஒரு ஹிந்தி படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை வைத்துத்தான் அவர் உருவாக்கினார்.

ஆனால், சில சமயம் அவரின் கணிப்பும் தவறாக முடிந்திருக்கிறது. முதலில் ரஜினி அதை சந்தித்தது அவரின் நூறாவது படமான ராகவேந்திரா. அவரின் மானசீக குருவான ராகவேந்திரரின் வாழ்க்கையை கதையாக எடுத்து அவரே நடித்தார். ரஜினியை மசாலா ஹீரோவாக பார்த்த ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, அப்படம் தோல்வி அடைந்தது.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஒரு கார்த்திக் சுப்பாராஜ்.. கமலுக்கு ஒரு லோகி! கேப்டனுக்கு இவர்தான் – விஜயகாந்துக்காக உருவான படம்

அதேபோல், தனது குருவான இமயமலை பாபாவை மனதில் வைத்து ரஜினி உருவாக்கிய திரைப்படம் பாபா. இப்படத்தை ரஜினியே சொந்தமாக தயாரித்தார். ஆனால், படமோ ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. படத்தின் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை. இத்தனைக்கும் இந்த படத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகி நடித்திருந்தார்.

Baba

Baba

மேலும், கவுண்டமணி, விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன் ஒரு காட்சியில் நீலாம்பரி கெட்டப்பில் வருவார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் உருவான போதே இந்த படம் ஓடாது என முதலில் சொன்னவர் கவுண்டமணிதான்.

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை பார்த்து உருவான அஜித் படம்!.. கடைசியில் ரிசல்ட் இதுதான்!..

அதேபோல், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமைக்க வந்த ராகவா லாரன்ஸும் அதை கருத்தைத்தான் ரஜினியிடம் சொன்னார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய டெல்லி கணேஷ் ‘பாபா படத்தில் பூசாரியாக நடித்திருப்பேன். அந்த படத்தின் கிளைமேக்ஸ் எடுக்கப்பட்ட போது ‘இந்த கிளைமேக்ஸ் காட்சி உங்கள் ரசிகர்களுக்கு பிடிக்காது’ ஏனெனில், நீங்கள் வில்லன்களை அடித்து நொருக்குவதைத்தான் உங்கள் ரசிகர்கள் விரும்புவார்கள்’ என சொன்னேன்.

Delhi Ganesh

Delhi Ganesh

‘அப்படியே சொல்றீங்க?’ எனக்கேட்டார். ரஜினி. ஆனால், அந்த படத்தின் கிளைமேக்ஸ் அதுதான் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்’ என டெல்லி கணேஷ் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ரஜினியுடன் 17 முறை மோதிய விஜயகாந்த் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema History

To Top