கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது! தரமாக தயாராகி வரும் கலக்கல் காமெடி படத்தின் இரண்டாம் பாகம்

Published on: January 13, 2024
desingu
---Advertisement---

Desingu Raja Movie: ஆக்‌ஷன் படங்கள், ரொமாண்டிக் படங்கள் இவைகளுக்கு இடையில் நகைச்சுவை படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதுவும் இப்போதைய சூழலுக்கு முழுக்க முழுக்க ஒரு  காமெடி படம் வெளியானால் பார்க்கிற ரசிகர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியாக இருக்கும்.

சமீப காலமாக சினிமாவை வன்முறை கலந்த படங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. திரும்பிய பக்கமெல்லாம் குண்டு சத்தம், துப்பாக்கி சூடு என காதுகளே வெடிக்கும் அளவுக்கு படங்கள் வெளிவருகின்றன. தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க சிரித்து வெகு நாள்கள் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க:அட மீனாக்கு பேசலாம் தெரியுதுப்பா!… ஓனர் ஆனதும் கெத்தும் வந்துடுச்சேம்மா!…

அந்த வகையில் நடிகர் விமல் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்  ‘தேசிங்குராஜா’. எழில் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக பிந்து  மாதவி நடித்திருப்பார். நடிகர் சூரியின் காமெடி இந்தப் படத்திற்கு பெரிய ப்ளஸ்.

சூரியும் விமலும் சேர்ந்து படமுழுக்க காமெடியில் பட்டையை கிளப்பியிருப்பார்கள். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்திருப்பார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகம் சத்தமே இல்லாமல் தயாராகி வருகிறதாம்.

இதையும் படிங்க: ‘படிக்காதவன்’ படத்தில் நடித்த குட்டி ரஜினியா இது? அட இந்த பிரபல நடிகையின் அண்ணன்தானா இவர்?

எழில் இயக்க இந்த இரண்டாம் பாகத்தில் ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து போன்ற காமெடி ஜாம்பவான்கள் இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார்களாம். ஆனால் லீடு ரோலில் நடிக்கக் கூடிய நடிகர், நடிகை பற்றி எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை..

ஆனால் படத்தின் இரண்டாம் பாகத்தில் நிச்சயமாக காமெடிக்கு பஞ்சமிருக்காது என்றுதான் சொல்ல வேண்டும். காமெடியில் இத்தனை நடிகர்கள் நடிக்கும் போது படமுழுக்க சிரிப்பு வெடியாக இருக்கும் என்று நம்பலாம். அதுமட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்தில் படத்திற்கு வித்யாசாகர்தான் இசையமைக்கிறாராம்.

இதையும் படிங்க: நான் அப்படி நடிப்பேன்னு யாரும் நம்பல!.. ஒருத்தர தவிர!.. விஜயகாந்த் சொன்னது யாரை தெரியுமா?…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.