Categories: Cinema News latest news

ஒரே நாளில் மொத்த வாழ்க்கையும் போச்சு… யாருக்கும் அருகதை இல்லை… தேவ் ஆனந்த் ஓபன் டாக்..!

Dev Anand: தமிழ் சீரியலில் ஹீரோவாக வலம் வந்த தேவ் ஆனந்த் திடீரென கைது, சிறை, தண்டனை என பல்வேறு சிக்கல்களில் சிக்கினார். இதனால் அவர் கேரியரை உருகுலைந்த நிலையில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல நாட்கள் கழித்து மனம் திறந்து இருக்கிறார்.

2006ல் தமிழ் சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் தேவ் ஆனந்த். அப்போது வளர்ந்து வந்த வைஷ்ணவி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் தேவ் ஆனந்த் தான் எனக் கூறி அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவருக்கு 5 வருட சிறை தண்டனையும் கிடைத்தது.

Also Read

இதையும் படிங்க: நான் திறமையான நடிகன்… அதிர்ஷ்டத்தில் ஹீரோவான ரஜினிகாந்த்… ராதாராவி சொல்லும் சூடான சம்பவம்..!

இதை தொடர்ந்து மேல்முறையீடு செய்ததில் அவர் தண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இதில் அவர் கேரியர் நிறையவே அடி வாங்கியதில், காமெடி ரோலுக்கு தள்ளப்பட்டார். இருந்தும் தொடர்ந்து சீரியலில் நடித்தும் வருகிறார்.

அவரின் இந்த வாழ்க்கை குறித்து தேவ் ஆனந்த் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி வருகிறது. அதில் இருந்து, சாட்சி சொல்ல வேண்டியவ இப்போ உயிரோட இல்லை. எனக்கும் வைஷ்ணவிக்கும் தான் நடந்தது என்னவென்று தெரியும். இப்போ நான் சொன்னா உண்மைனு நம்பிடுவீங்களா? பொய்னு தானே சொல்லப் போறீங்க?

இதையும் படிங்க: ராஷ்மிகாவின் காதலர் இவர் தானா? அனிமல் படக்குழு மொத்தமாக போட்டுடைத்த உண்மை.. கவலையில் ரசிகர்கள்..!

உண்மை சொன்னால் யாருமே மதிப்பது இல்லை. பொய்யை தான் இப்போதைய உலகம் நம்புகிறது. என்னவென்றே தெரியாமல் பிறரின் வாழ்க்கை பற்றி பேச யாருக்குமே அருகை இல்லை எனக் கோபமாக தெரிவித்து இருந்தார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னர் தன் வாழ்க்கையில் நடந்ததை தேவ் ஆனந்த் தற்போது கூறி இருப்பது வைரலாக பரவி வருகிறது.

மேலும் வைஷ்ணவியை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளக் கூறி தேவ் ஆனந்த் வற்புறுத்தியதாகவும், அதில் ஏற்பட்ட பிரச்னையில் தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டதாக அவர் பெற்றோர்கள் புகார் கொடுத்திருந்தனர். அந்த அடிப்படையில் தான் தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan