என் wife முன்னாடி இப்படி சொல்லுவாங்கனு நினைக்கல! விஜய் பட நடிகையால் தேவா லைஃப்ல நடந்த குழப்பம்

deva
Music Director : தமிழ் சினிமாவில் காலத்தால் மறக்க முடியாத வகையில் எத்தனையோ இசையமைப்பாளர்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தேனிசைத் தென்றல் தேவா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற சிறந்த இசையமைப்பாளர்.
கானா பாடுவதில் வல்லவரான தேவா பிரசாந்த், விஜய், அஜித் இவர்களின் ஆரம்ப கால படங்களின் வெற்றிக்குக் காரணமாகவும் அமைந்திருக்கிறார். இவரது இசையில் அமைந்த பாடல்கள் எல்லாம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
இதையும் படிங்க: ஒருவழியா ஆரம்பிக்க போகும் பொருட்காட்சி.. பாக்கியாவால் கடுப்பாகும் கோபி.. கண்ணீர் விடும் செழியன்..!
சமீபத்தில் ஒரு பேட்டியில் சந்தித்த போது தொகுப்பாளினி ஒருவர் தேவாவை பார்த்து அடுத்ததாக படத்திலும் நடிக்கிறார்களாமே? அப்படி நடித்தால் எந்த ஹீரோயினுடன் நடிக்க ஆசைப்படுவீர்கள்? என கேட்டார். அதற்கு பதிலளித்த தேவா இது சம்பந்தமாக ஒரு நிகழ்வை கூறினார்.
தேவாவின் மனைவி எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளமாட்டாராம். தேவா சுமார் 250 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்ற வகையில் தேவா 250 விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அதற்கு தேவா அவர் மனைவியிடம் ‘என்னைப் பற்றி நிறைய பேர் பாராட்டி பேசுவார்கள். அதனால் அதை பார்க்கவாவது வா மா’ என்று கூறி அழைத்து வந்தாராம்.
இதையும் படிங்க: எப்பா நிக்ஷா புயல் வந்ததால தப்பிச்ச! நியாயம் கேட்க போன விஷ்ணுவிடம் என்னெல்லாம் பேசுறார் பாருங்க
அப்போது இது தேவாவின் மனைவி என பல பேருக்கு தெரியாதாம். அதனால் இரண்டாவது வரிசையில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தாராம். நடிகை சுவாதி குத்துவிளக்கு ஏற்றி தேவாவை பற்றி பேச ஆரம்பித்தாராம்.
அதில் அவர் கூறியது ‘தேவா இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை. இப்போது நான் காரில் வருகிறேன் என்றால் அதற்கு தேவாதான் காரணம். ஏசி என சகலமும் அனுபவிக்கிறேன் என்றால் அதற்கும் தேவாதான் காரணம். நான் இங்கு வருவதற்கும் காரணம் தேவாதான்’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதே தேவா அவர் மனைவியை பார்த்தாராம்.
இதையும் படிங்க : பாக்க பாக்க என்னமோ பண்ணுது!. டைட் உடையில் கிறங்க வைக்கும் ஜான்வி கபூர்!..
உடனே தேவாவின் மனைவி எழுந்து போய்விட்டாராம். அவர் போன பிறகு சுவாதி ‘ நான் சொன்னது என் முதல் படமான தேவா படத்தை பற்றி’ என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு தேவா மனதிற்குள் ‘இதை என் மனைவி இருக்கும் போதே சொல்லியிருக்கலாமே’ என நினைத்துக் கொண்டாராம்.