Connect with us
vishnu

Biggboss Tamil 7

எப்பா நிக்‌ஷா புயல் வந்ததால தப்பிச்ச! நியாயம் கேட்க போன விஷ்ணுவிடம் என்னெல்லாம் பேசுறார் பாருங்க

Nilex: விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு பங்கு பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் வெற்றி நடை போட்டு வருகிறது.

18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிகழ்ச்சி இன்று 13 போட்டியாளர்களுடன் களத்தில் நிற்கின்றது. இந்த வார எலிமினேஷனில் நிக்‌ஷன், விசித்ரா, பூர்ணிமா, மணி,  அர்ச்சனா ஆகியோர் இருந்த நிலையில்  நிக்‌ஷன் குறைந்த ஓட்டுகளுடன் வெளியேறும் நிலையில் இருந்தார்.

இதையும் படிங்க: பாக்க பாக்க என்னமோ பண்ணுது!. டைட் உடையில் கிறங்க வைக்கும் ஜான்வி கபூர்!..

ஆனால் சமீபத்தில் மிக்ஜாம் புயலின் காரணமாக பெரும்பாலானோர் ஓட்டளிக்க முடியாத நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் நிக்‌ஷன் அதிர்ஷ்டவசமாக இந்த வார எலிமினேஷனில் இருந்து தப்பித்தார்.

இந்த நிலையில் நேற்று ஒரு வீடியோ வெளியானது. அதில் விஷ்ணுவுக்கும் நிக்‌ஷனுக்கும் இடையே ஒரு வாக்கு வாதம் நடந்தது. அதில் வினுஷாவை பற்றி விஷ்ணு நிக்‌ஷனிடம் கேட்டார். அதில் ஒருவரை பற்றி பேசும் போது அவருக்கு வெளியில் ஒரு வாழ்க்கை இருக்குனு நினைக்க வேண்டும் நிக்‌ஷன் என கூறுகிறார்.

இதையும் படிங்க: வந்த அன்னைக்கே டைவர்ஸா..? முத்து, மீனா வாழ்க்கையில் கட்டையை போடும் ஸ்ருதி.. ஆரம்பிச்சாச்சு போலயே..!

அதற்கு நிச்ஷன் அத நான் வெளில போய் பார்த்துக் கொள்கிறேன். வினுஷாவிடம் போய் பேசிக் கொள்கிறேன். நீங்க இப்பொழுது அதை பேசி மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என கூற விஷ்ணு மீண்டும் மீண்டும் அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அதெல்லாம் நான் ஜாலியாகத்தான் பேசினேன் என்றும் எப்படி சமாளிக்க வேண்டுமோ அப்படி பார்த்துக் கொள்கிறேன் என்றும் நிக்‌ஷன் கூறும் அந்த வீடியோதான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

இதையும் படிங்க:டாடா படத்தின் தெலுங்கு வெர்ஷனா?.. நானியின் ‘ஹாய் நான்னா’ எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..

 

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top