
latest news
டாடா படத்தின் தெலுங்கு வெர்ஷனா?.. நானியின் ‘ஹாய் நான்னா’ எப்படி இருக்கு?.. விமர்சனம் இதோ!..
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாய் நான்னா திரைப்படம் இன்று வெளியானது. சீதா ராமம் படத்தில் ஹீரோயினாக நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மிருணாள் தாகூர் தான் இந்த படத்திலும் ஹீரோயின்.
துல்கர் சல்மான், நானியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுக்கும் ஜோடியாக நடித்து வருகிறார். அவரது அழகும் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: சேதுவுக்கு முன்பே பாலா இயக்கவிருந்த திரைப்படம்!. ஐயோ பாவம் இப்படி ஆகிப்போச்சே!..
தமிழில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா படத்தில் மனைவி விட்டுப் பிரிந்து போக தனது மகனை தந்தை வளர்ப்பதும் பின்னர் மீண்டும் பிரிந்த மனைவியை சந்திப்பதும் கடைசியில் சேர்வதுமாக அந்த படத்தின் கதை இருந்தது.
இந்நிலையில், தெலுங்கில் உருவாகி உள்ள ஹாய் நான்னா படத்தில் மனைவி இல்லாமல் தனது மகளை நானி வளர்த்து வருவதும், மனைவி போன்ற உருவமுடைய இன்னொரு பெண் அவர் வாழ்வில் வந்து மகளை பார்த்துக் கொள்ள முயல்வதும், அந்த பெண் யார்? நானியின் மனைவிக்கு என்ன ஆனது என்கிற சுவாரஸ்யங்களை ட்விஸ்ட்டுகளாக வைத்து உருவாக்கி உள்ள படம் தான் இந்த ஹாய் நான்னா. இந்த படம் டாடாவின் ரீமேக் இல்லை என்றாலும், கதையின் ஒன்லைன் ஒரு சில இடங்களில் ஒத்துப் போகிறது.
இதையும் படிங்க: விக்ரமுக்கு முன்.. விக்ரமுக்கு பின்! எங்க ரேஞ்சே வேற – கொடுத்த வாக்கை காத்தோடு பறக்க விட்ட கமல்
டாடா படத்தைப் போலவே இந்த படமும் ரசிகர்களுக்கு கத்தி, துப்பாக்கி சத்தம் ரவுடிசம் எல்லாம் இல்லாமல், அழகான ஒரு கவிதையாக திரையில் ரசிக்க வைக்கிறது. மிருணாள் தாகூரின் உடை, நடை, சிரிப்பு என அத்தனை அழகையும் சீதா ராமம் படத்திற்கு பிறகு இந்த படத்தில் ரசிக்க முடிகிறது. கவர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் வந்தாலும், ஹோம்லி லுக் தான் உங்களுக்கு சூட் ஆகுது என ரசிகர்கள் மிருணாளுக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
ஹாய் நான்னா – அழகான கவிதை
ரேட்டிங்: 3.25/5.