Connect with us
kamal

Cinema News

விக்ரமுக்கு முன்.. விக்ரமுக்கு பின்! எங்க ரேஞ்சே வேற – கொடுத்த வாக்கை காத்தோடு பறக்க விட்ட கமல்

Actor Kamal: தமிழ் சினிமாவில் ஒரு ஒப்பற்ற நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல். சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவருக்கு இருக்கிறது. தற்போது கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு வருகிறார்.

அதை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு எச்.வினோத் இயக்கும் ஒரு படம் என தொடர்ந்து பிஸியாக இருக்கும் நடிகராக தற்போது கமல் காணப்படுகிறார்.

இதையும் படிங்க: அப்போ வாய மூடிட்டுதான இருந்தீங்க… Me Too குறித்து நடிகை சீதாவின் பகிர் குற்றச்சாட்டு…

இது  மட்டுமில்லாமல் பிக்பாஸிலும் தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து வருகிறார். கமல் சரியாக தூங்கி நான் பார்த்ததே இல்லை என ஒரு சினிமா பிரபலம் கூற கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தளவுக்கு சினிமாவுக்காகவும் தன் தொழில் மேல் இருக்கும் பக்திக்காகவும் இந்தளவுக்கு மெனக்கிட்டு வருகிறார்.

இதோடு படங்களை தயாரிக்கும் பணிகளிலும் கமல் ஈடுபட்டு வருகிறார். சிவகார்த்திகேயனை வைத்து  ஒரு படமும் சிம்புவை வைத்து ஒரு படமும் தயாரிக்கிறார் கமல். இந்த நிலையில் பிக்பாஸில் மிகவும் புகழ்பெற்றவர் தர்ஷன்.

இதையும் படிங்க: அந்த நீலாம்பரியே அவர்தான்!.. படையப்பா பார்த்துவிட்டு ஜெயலலிதா சொன்னது இதுதான்!..

சமிபத்தில் தான் தர்ஷன் நடித்த நாடு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்றது. அவர் பிக்பாஸில் இருக்கும் போது கமல் அவருக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார். அதாவது அவரை வைத்து ராஜ்கமல் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கும் என வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் அவர் சொல்லியே ஆண்டுகள் கடந்து விட்டது. இன்று வரை அதை கமல் நிறைவேற்றவே இல்லை. இந்த நிலையில் இதை பற்றி சித்ரா லட்சுமணன் கூறும் போது கமல் அந்த வாக்குறுதி கொடுக்கும் போது ராஜ்கமல் நிறுவனம் இருந்த நிலைமை வேறு.

இதையும் படிங்க: வாண்டடா போய் நடித்த ரஜினி!… 25 நாட்களில் உருவான மெகா ஹிட் திரைப்படம்..

இப்போது இருக்கும் நிலைமை வேறு. ஒரு வேளை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் தர்ஷன் நடிப்பாரே தவிற அவரை ஹீரோவாக வைத்து படத்தை எடுக்க மாட்டார்கள் ராஜ்கமல் நிறுவனம் என கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top