என்னோட முதல் ஹிந்தி படம் ரிலீசே ஆகல… ஃபீல் பண்ண தேவயானி!
தமிழில் பல படங்களில் நடித்தவர் நடிகை தேவயானி.

ஒரு காலத்தில் நடிகை தேவயானிக்கு மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருந்தது. இவர் தமிழில் ‘காதல் கோட்டை, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, நீ வருவாய் என’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில், நடிகை தேவயானி கொடுத்த பேட்டியில் “ஆக்ச்சுவலா நான் ஹீரோயினா அறிமுகமானது ஒரு ஹிந்தி படத்துல தான். அந்த படத்தோட பேரு ‘கோயல்’.
அப்போ நான் ஃபிலிம் லைன்ல வருவேன்லாம் நினைச்சு பாக்கல. அந்த படத்தோட புரொடக்ஷன் மேனேஜர் எங்க ஃபேமிலி ஃப்ரெண்டு தான், அவர் தான் ஆடிஷன் பத்தி சொன்னாரு.

நிறைய பேர் அந்த ஆடிஷன்ல கலந்துக்கிட்டாங்க. ஆனா, நான் செலக்ட் ஆகி ஹீரோயின் ஆயிட்டேன். 45 நாள் ஒரே ஷெட்யூல்ல மொத்த ஷூட்டிங்கும் முடிஞ்சது.
போஸ்ட் புரொடக்ஷன்லாம் முடிஞ்சு முழு படமும் ரெடி ஆயிடுச்சு. சாங்ஸும் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டாயிடுச்சு. ஆனா, ஃபைனான்ஷியல் பிரச்சனையால அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்ல இப்போவரைக்கும்” என்று கூறியுள்ளார்.







