
Cinema News
‘விக்ரம்’ டீனாவிற்கு வாய்ஸ் கொடுத்து ரொம்ப ஃபீல் பண்ணேன்!.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல!..
கடந்தாண்டு தமிழ் சினிமாவில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்திய படமாக விக்ரம் படம் அமைந்தது. படம் எடுக்கும் போது இந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் படம் வெளியாகி ஒரு சூறாவளியையே ஏற்படுத்தி விட்டது.

kamal vasanthi
லோகேஷ் அதுவும் கமலை வைத்து இப்படி ஒரு படத்தை கொடுப்பார் என்றும் யாரும் நினைக்கவில்லை. அப்படி ஒரு தரமான சம்பவத்தை செய்துவிட்டு சென்றார். அதன் எதிரொலி தான் இப்போது லியோ படத்தின் மீதான் எதிர்பார்ப்பிற்கும் காரணமாக இருக்கின்றது. விஜய் நடிப்பதற்காக இருக்கிறதோ இல்லையோ லோகேஷின் படம் என்பதற்காகவே பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.
விக்ரம் படத்தில் ஒவ்வொரு ஏஜெண்ட்களையும் அறிமுகப்படுத்திய விதம் பிரமிப்பை ஏற்படுத்தியது. காட்சிக்கு காட்சி பதற வைத்தார் லோகேஷ். இவருமா அந்த ஏஜெண்ட் என ஆச்சரியப்படுத்தினார். அப்படி ஒரு ஏஜெண்ட் தான் டீனா.

vasanthi
டான்ஸ் மாஸ்டரான வசந்தி தான் ஏஜெண்ட் டீனாவாக நடித்து ஆச்சரியப்படுத்தியிருப்பார். அவரை அறிமுகம் செய்கிற வரைக்கும் அவரை ஒரு வீட்டு வேலைக்காரியாகவே நினைத்த ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸை கொடுத்திருப்பார் லோகேஷ். இந்த நிலையில் ஏஜெண்ட் டீனாவிற்கு வாய்ஸ் கொடுக்க போய் சோகம் தான் மிச்சம் என பிரபல நடிகை புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
சின்னத்திரையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை தேவிப்ரியா. இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்து வருகிறார். விக்ரம் படத்திற்கு ஏஜெண்ட் டீனாவிற்காக வாய்ஸ் ஓவர் கொடுப்பதற்கு ஆடிசன் போனாராம். இவர் ஆடிசன் போனாலே தேர்ந்தெடுப்பட்டு விடுவாராம்.

devi priya
ஆனால் இந்தப் படத்தில் ‘சார் நான் ஏஜெண்ட் டீனா பேசுகிறேன்’ என்பது வரைக்கும் பேசியிருக்கிறார். ஆனால் தேவிப்ரியாவின் வாய்ஸ் மிகவும் சின்ன குழந்தை மாதிரி இருந்ததால் வேறு ஆர்ட்டிஸ்டை செலக்ட் செய்து விட்டார்களாம். கமல் கூட தான் நடிக்க முடியவில்லை, கமல் படத்தில் டப்பிங் பேசுகிறோம் என்ற ஆசையில் வந்த எனக்கு மிகவும் வருத்தமாகி விட்டது என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : விக்கி – நயன் உறவில் விரிசலா?.. இது தான் காரணமா?..