Ilaiyaraja DSP: தமிழ் சினிமாவில் துள்ளலோடு இசையுடன் ரசிகர்களை பரவசப்படுத்துபவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் தேவி ஸ்ரீ பிரசாத். புஷ்பா படத்திற்கும் இவர்தான் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதிலும் குறிப்பாக ஊ சொல்றீயா பாடல் இந்தியா முழுவதும் ஒலித்த பாடலாக மாறியது. ஒரு ஐகானிக் இசையமைப்பாளராகவே தேவி ஸ்ரீ பிரசாத் பார்க்கப்படுகிறார். அவரிடம் எப்போதுமே ஒரு எனர்ஜி காணப்படும். அவர் பாடும் போது கேட்பவர்களையும் ஆட வைக்கும். அதுமட்டுமில்லாமல் பாடும் போது எப்போதும் தேவி ஸ்ரீ பிரசாத் ஆடிக் கொண்டேதான் பாடுவார்.
இதையும் படிங்க: முத்துவுக்கு ஆப்படித்த சிட்டி ஆட்கள்… மினிஸ்டரிடம் மாட்டுக்கொள்ள போவது யார்?
அதுவே ரசிகர்களை அவர் பக்கம் இழுப்பதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் கையாளும் யுத்தியாக கூட இருக்கலாம். இந்த நிலையில் நேற்று தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் இளையராஜா சம்பந்தப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. தேவி ஸ்ரீ பிரசாத் புதியதாக ஒரு ஸ்டூடியோவை கட்டியிருக்கிறாராம். அதனால் வாழ்த்த வந்திருக்கிறார் இளையராஜா என்று செய்திகள் வெளியானது.
ஆனால் உண்மையிலேயே தேவி ஸ்ரீ பிரசாத்தின் நீண்ட நாள் கனவாக ஒன்று இருந்ததாம். சொந்தமாக ஒரு ஸ்டூடியோவை கட்டி அதில் இளையராஜா உருவம் பொதித்த பெரிய புகைப்படத்தையும் அந்த ஸ்டூடியோவில் வைத்து அந்த புகைப்படத்தின் அருகில் இளையராஜாவுடன் நின்று தேவி ஸ்ரீ பிரசாத் போட்டோ எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம்.
இதையும் படிங்க: குணா படத்தை பார்த்துவிட்டு இயக்குனரிடம் ரஜினி கேட்ட கேள்வி!.. மனுஷனுக்கு இவ்வளவு ஆசையா!..
இதுதான் அவருடைய பல ஆண்டு கனவாம். அது இப்போது நனவாகிவிட்டதால் இளையராஜாவை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…