ரஜினியோட மோத வேணாம்!.. தள்ளிப்போகும் ஓம் ரிலீஸ் தேதி.. இதுதான் காரணமா?!..

தனுஷின் ஓம் பட ரிலீஸ் அப்டேட்..

dhanush

நடிகர் தனுசுக்கு கடந்த சில வருடங்களாகவே ஹிட் படங்கள் அமையவில்லை. ராயன் படத்திற்கு பின் அவர் நடித்த இட்லி கடை, குபேரா, கர ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவில்லை. கர படத்திற்கு பின் அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகும் எனப்படக் கூடிய ஏற்கனவே அறிவித்தது.

ஆனால் அக்டோபர் 15ம் தேதி ரஜினியின் ஜெயிலர் 2 வருவதால் ரஜினியுடம் மோதுகிறார் என்கிற இமேஜ் வரக்கூடாது என்று நினைத்த தனுஷ் நவம்பர் நவம்பர் 20ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்து இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய ஓடிடி நிறுவனத்திடம் அனுமதி கேட்டிருந்தார்.

ஏனெனில், தற்போது திரைப்படங்களின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனங்கள் தான் முடிவு செய்கின்றன. இந்நிலையில் டிசம்பர் மாதம் உங்கள் திரைப்படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என ஓடிடி நிறுவனம் சொல்லிவிட்டதால் டிசம்பர் 3ம் தேதி ஓம் படத்தை வெளியிடலாம் என்கிற முடிவுக்கு தனுஷ் வந்து விட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.

CR
ஆசிரியர்

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →