அந்தப் படத்திற்காக வழிவிடும் தனுஷ்! அப்போ பொங்கல் ரிலீஸ் இல்லையா? கேப்டன் மில்லரின் நிலைமை?
Actor Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் சமீபகால வளர்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. ஹீரோ மெட்டிரியலே இல்லை. இவன்லாம் நடிக்க வந்துட்டான் என்ற கடுமையான விமர்சனத்திற்கு ஆளானவர்.
ஆனால் இன்று பாலிவுட் , ஹாலிவுட் என உலகளவில் தன்னுடைய தரம் என காட்டி வருகிறார். விமர்சித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். சவாலான பல கதாபாத்திரங்களை ஏற்று வாயடைக்க வைத்து விட்டார் தனுஷ்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் மீது எந்தளவு பற்று கொண்டவர் கேப்டன்! அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் இதோ
இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தன்னுடைய 50வது படத்தையும் இயக்கி தனுஷ் நடித்திருக்கிறார்.
அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதன் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷனில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தியேட்டரில் செம அடி போல!.. அதிரடியாக ஓடிடிக்கு வரும் பிரபாஸின் சலார்.. அதுவும் இவ்ளோ சீக்கிரமா?
இந்தப் படத்தை 2023 சம்மருக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் அறிவிப்பை தவிர வேறெந்த அப்டேட்டும் வெளிவரவில்லை. படத்திற்கான டைட்டிலும் இன்னும் முடிவாகவில்லை. அதற்கு காரணம் கேப்டன் மில்லர் திரைப்படம்தான்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யவுள்ளதால் தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை பொங்கல் முன்னிட்டு அல்லது பொங்கலுக்கு பிறகு அறிவிப்பதாக படக்குழு முடிவெடுத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: புது வீடு… மகனின் திருமணம்.. விஜயகாந்துக்கு நிறைவேறாமல் போன ஆசைகள்..