டெரர் லுக்கில் சும்மா மிரட்டுறாரே தனுஷ்!.. அதிர வைக்கும் ராயன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!..

Published on: February 19, 2024
raayan
---Advertisement---

துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். அதன்பின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை என டேக் ஆப் ஆனார். ஒருபக்கம் நல்ல கதையம்சம் கொண்ட, நடிப்புக்கு தீனி போடும் கதைகளிலும், மறுபக்கம் பக்கா மசாலா கமர்ஷியல் படங்களிலும் நடித்து வரும் நடிகர் இவர்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து 17 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பின் அவரை பிரிந்திருக்கிறார். இருவரும் மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. அதேநேரம், ஐஸ்வர்யா சினிமா தொடர்பாக என்ன செய்தாலும் தனுஷ் தனது வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்.

இதையும் படிங்க: பிதாமகனை பட்டி டிக்கெரிங் செய்த பாலா!.. வணங்கான் டீசர் ரிலீஸ்.. அருண் விஜய் நடிப்பு எப்படி?

ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் வெளியானபோதும் வாழ்த்துக்களை சொன்னார். ஒருபக்கம் தனுஷின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் ஆக்சன் பட விரும்பிகளுக்கு விருந்தாக அமைந்தது. அந்த படத்தை முடித்த கையோடு தனது 50வது படத்தி இயக்கி நடிக்க துவங்கினார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஸ்டுடியோவில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டி எனும் படத்தை இயக்கிய தனுஷ் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் இது.

இதையும் படிங்க: தினமும் ஒரு செல்பி!. ஆசையாக பிளான் போட்ட விஜய்!.. இப்படி மண் அள்ளி போட்டாங்களே!..

இந்த படத்தில் துஷரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி என பலரும் நடித்திருக்கிறார்கள். இது ஒரு பக்கா ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.

இந்த போஸ்டரில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் என எல்லோருமே கையில் ரத்தக்கறை படிந்த ஆயுதத்தை கையில் வைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்கள். எனவே, தனுஷ் ரசிகர்களுக்கு ஃபுல் ஆக்‌ஷன் விருந்து காத்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள ராயன் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

raayan

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.