தனுஷை என்னால் சமாளிக்க முடியல.! கதறும் இயக்குனர் செல்வராகவன்.!
செல்வராகவன் கதை, திரைக்கதை எழுத காஸ்தூரி ராஜா இயக்கியதாக அறிமுகப்படுத்தபட்ட திரைப்படம் துள்ளுவதோ இளமை. உண்மையில் அது செல்வராகவன் இயக்கிய திரைப்படம். வியாபாரத்திற்காக செல்வராகவன் - தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா பெயர் போடப்பட்டிருக்கும்.
அந்த படத்தில் தான் செல்வராகவன் இயக்குனராகவும், நடிகர் தனுஷ் நடிகராகவும் அறிமுகமாயினர். அதன் பின்னர், காதல் கொண்டேன், புதுபேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர்.
தற்போது இவர்கள் மீண்டும் நானே வருவேன் எனும் திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷை இயக்குவது பற்றி இயக்குனர் செல்வராகவன் ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது,
இதையும் படியுங்களேன் - நம்ம ஆடுற ஆட்டத்திற்கு இதெல்லாம் தேவைதானா.?! யுவனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
தனுஷை தற்போது சமாளிப்பது கஷ்டமாக இருக்கிறது. முன்பெல்லாம் நான் நடித்து காட்டி அதிலிருந்து அவருக்கு சொல்லிக்கொடுத்து படமாக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது, அவர் நிறைய முன்னேறி உள்ளார். எப்படி நடிக்க வேண்டும் என அவர் எளிதாக புரிந்துகொண்டு செய்துவிடுகிறார்.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் காலகட்டத்தில் இருந்த தனுஷிற்கும் தற்போதுள்ள தனுஷிற்கும் நிறைய வேற்றுமைகள் உருவாகிவிட்டன. என தனது தம்பியை பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.