தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்துக்கு காரணம் சிம்புவா? வாய் இருக்குன்னு பேசக்கூடாது… வெடித்த பிரபலம்!..
Dhanush-Aishwarya: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவகாரத்தில் சிம்பு பழி வாங்கிட்டாரே என சிலர் கிசுகிசுத்து வந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் அந்தணன் தன்னுடைய பேட்டி ஒன்றில் இதுகுறித்து காரசாரமாக பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அந்தணன் கூறுகையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, விவகாரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கின்றனர். இந்த விவாகாரத்திற்கு பின்னால் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த நிலையில் தான் இதில் சிம்பு பெயரும் தற்போது அடிப்படுகிறது.
இதையும் படிங்க: அபார்ஷன் பண்ண சொன்ன கோபி… கடுப்பில் கத்திவிட்ட ராதிகா… தேவையா இதெல்லாம்?
ஐஸ்வர்யா தற்போது இரண்டு மகன்களை பெற்ற தாயாகி இருக்கிறார். அவரும் சிம்புவுக்கு இருந்த காதல் டீன் ஏஜ் பருவத்தில் தான். ஆனால், மெச்சுரிட்டி வந்த பின்னர் அவர்களுக்கு புரிந்ததால் பிரிந்துவிட்டார்கள். அதன்பின்னரே தனுஷை ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்தார். இது சினிமா துறையில் ரொம்பவே சகஜமான விஷயம். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் பின்னர் பிரிவது சாதாரணமாகி விட்டது.
சினிமா துறையினரை பொறுத்த வரை காதலை அவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள கூடாது. அதுப்போல தான் ஐஸ்வர்யா விவகாரத்து முன்னாள் காதலனான சிம்புவை வம்பு இழுப்பது சரியா? நடிகர் சிம்புவும் முன்பு போல் எல்லாம் கிடையாது. இப்போ இருக்கும் சிம்புவிடம் அறிவும், பக்குவமும் நிறைய இருக்கிறது.
இதையும் படிங்க: நான் டாப் ஸ்டார் இல்ல… பிரசாந்தே இப்படி இப்படி சொல்ற அளவுக்கு என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்…
அவருக்கு பழைய காதலிகளின் வாழ்க்கையை கெடுக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. அவர் அப்படி யோசித்தால் ஹன்சிகா வாழ்க்கையை கெடுத்து இருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. ஒரு இடத்தில் கூட அவரை பற்றி தப்பாகவே பேசவில்லை. இதே கதை தான் நயனுக்கும். எங்கேயாவது தவறாக பேசியிருக்கிறாரா ? பேசியதே கிடையாது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.