ரஜினிகாந்தின் தொடர் முயற்சி... மீண்டும் இணைய இருக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா...
நடிகர் தனுஷ் தனது மனைவியுடன் பிரிவதாக ஜனவரி மாதம் அறிவித்திருந்தார். தற்போது அந்த முடிவை இருவரும் கைவிட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் வரை நடித்து வரும் தனுஷ், சமீபத்தில் விவகாரத்தினை அறிவித்தார். இது பலருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் 2004ல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டதாக கடந்த ஜனவரி மாதம் இருவரும் தங்கள் சமூக வலைத்தளம் மூலம் அறிவித்தனர். ஆனால், ரஜினிக்கு இந்த முடிவில் திருப்தி இல்லையாம். இருவரையும் சேர்த்து வைத்து விட வெகுவாக போராடி இருக்கிறார்.
இதையும் படிங்க: மீண்டும் துளிர்விடுமா காதல்.? ஒரே வீட்டில் தனுஷ் – ஐஸ்வர்யா.! வெளியான ரகசிய தகவல்…
இருவரின் நண்பர்கள், உறவினர்கள் மூலம் என தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே இருந்திருக்கிறார். இதில் கடைசியாக இருவரும் மீண்டும் இணைந்து வாழ ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதை தொடர்ந்து, மீண்டும் இணைந்து விட்டோம் என இருவரும் விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.