ஏன் அனிருத் பின்னாடி தொங்கிகிட்டு... அவர தூக்குங்க.. வாத்தி படத்தில் இதற்காக தான் அனிருத் இல்லை...

dhanush anirudh
தனுஷ் தனது அடுத்த படமான வாத்தி படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தை போடாமல் போனதன் காரணம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமா சிலரின் கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும். அதில் ஒன்று தான் தனுஷ் மற்றும் அனிருத்தின் கூட்டணி. இவர்கள் இருவரின் காம்போவில் வெளியான எல்லா பாடல்களுமே வைரல் ஹிட்டானது. அதிலும் வொய் திஸ் கொலவெறி பாடல் எல்லாம் தாறுமாறு ஹிட் கொடுத்தது. இந்த ஜோடி மீது யார் கண் பட்டதோ ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர்.

vathi dhanush
இதற்கு தனுஷ் தரப்பில் காரணமாக கூறப்படுவது விக்னேஷ் சிவன் மற்றும் சிவகார்த்திகேயன் கூடவெல்லாம் அனிருத் கூட்டு வைத்து கொள்வது தனுஷிற்கு பிடிக்காமல் போனதாம். இதை தொடர்ந்து ஒருவரும் படம் பண்ணாமல் இருந்தனர். பலவருட ப்ரேக்கிற்கு பின்னர், திருச்சிற்றம்பலம் படத்தில் இந்த ஜோடி இணைந்தது. சரி இனி இவர்கள் தான் ட்ரெண்ட் செட்டாக அமைவார்கள் என நினைத்தனர் கோலிவுட் வட்டாரம்.

gv prakash
ஆனால், தனுஷின் அடுத்த படமான வாத்தியில் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏற்கனவே ரொம்ப பிஸியாக இருக்கும் அனிருத்திடம் ஏன் தொடர்ந்து நிற்க வேண்டும் என தனுஷ் நினைப்பதால் தான் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் பக்கம் சென்று விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.