More
Categories: Cinema News latest news

“என் படத்தை இப்போ ரிலீஸ் பண்ணிடாதீங்க”…. தயாரிப்பாளரிடம் கெஞ்சிய தனுஷ்… இவருக்கா இப்படி ஒரு நிலைமை??

இந்தியாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தனுஷ், தற்போது தமிழில் “வாத்தி” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார்.

Dhanush in Vaathi

“வாத்தி” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ், தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். அருண் மாதேஸ்வரன் இதற்கு முன் “ராக்கி”, “சாணிக்காயிதம்” போன்ற திரைப்படங்களை இயக்கியுளார்.

Advertising
Advertising

இதனிடையே தனுஷ் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியான திரைப்படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ். தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

Dhanush in Naane Varuven

“நானே வருவேன்” திரைப்படம் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகத்தோடு மோதியது. எனினும் “நானே வருவேன்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. மேலும் இத்திரைப்படம் எந்த வித புரோமோஷனும் இல்லாமல் வெளிவந்தது.

Ponniyin Selvan

“பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ஏன் நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட்டனர்?” என்ற கேள்வி சினிமா வட்டாரங்களில் வலம் வந்துகொண்டே இருந்தது. இது குறித்து கலைப்புலி எஸ். தாணுவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது அவர் “பொன்னியின் செல்வனுக்கு போட்டியாகத்தான் நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற எந்த நோக்கமும் எனக்கு இல்லை” என கூறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், “நானே வருவேன்” திரைப்படம் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தோடு மோதியது குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 10 வருடங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு சொன்ன டைம் டிராவல் கதை… அசந்துப்போன விஜய்… அப்பவே அப்படி…

Kalaipuli S Thanu

அதாவது “நானே வருவேன் திரைப்படத்தை பொன்னியின் செல்வனோடு ரீலீஸ் செய்ய வேண்டாம், பொன்னியின் செல்வனோடு நாம் மோத வேண்டாம்  என கலைப்புலி தாணுவிடம் தனுஷ் கூறினாராம். அதற்கு தாணு ‘பொன்னியின் செல்வன் சரி இல்லை என்றால் மொத்த கூட்டமும் நானே வருவேன்னுக்குத்தான் வருவார்கள்’ என்று கூறி அத்திரைப்படத்தை வெளியிட்டு விட்டார். அதனால்தான் தனுஷ், நானே வருவேன் திரைப்படத்திற்கு எந்த வித புரோமோஷனும் செய்யவில்லை” என ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்துதான் “நானே வருவேன்” திரைப்படம் வெளிவந்தது. ஆனால் “நானே வருவேன்” திரைப்படத்தை “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு போட்டியாக வெளியிடவேண்டாம் என தனுஷ் கூறியும், அத்திரைப்படத்தை வெளியிட்டதாக அந்தணன் கூறியுள்ளது வேதனைக்குரிய விஷயம்தான்.

Published by
Arun Prasad

Recent Posts