வெறும் 3 செகண்டுக்கு 10 கோடியா?… கல்யாண வீடியோவால நயனுக்கு கிடைச்ச அமௌன்ட் இதுதான்…!

Published on: November 16, 2024
---Advertisement---

நயன்தாரா ஆவணப்படத்திற்கு 3 செகண்ட் வீடியோவை பயன்படுத்த தனுஷ் 10 கோடி கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களின் திருமண வாழ்க்கையை பற்றி ஆவணப்படம் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

திருமணமான சிறிது நாட்களிலேயே இந்த ஆவணப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இந்த படம் வெளியாகவில்லை. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படம் நயன்தாராவின் Beyond the fairy tale என்ற பெயரில் டாக்குமெண்டரியாக வரும் நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருக்கின்றது.

இதையும் படிங்க: பிக்பாஸ் போட்டியாளருக்காக தளபதி செய்த சம்பவம்… இதெல்லாம் நம்பலாமா வேணாமா?

நடிகை நயன்தாராவின் சினிமா வாழ்க்கை தொடங்கி அவரின் காதல், திருமணம் என அனைத்தையும் இந்த டாக்குமெண்டரியில் காட்டி இருக்கிறார்கள். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.

இந்த காதல் அனுபவங்கள் மற்றும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் என எதையுமே நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தக்கூடாது என்று கூறி தனுஷ் கடந்த இரண்டு வருடங்களாக முட்டுக்கட்டை போட்டிருந்தார். அதனால் தான் இப்படம் netflixல் வெளியாகாமல் இருந்து வந்தது. இருவருக்கும் இடையே இரண்டு ஆண்டுகள் நடந்த போர் தற்போது வெடித்து இருக்கின்றது.

nayandhanush
nayan_dhanush

சுமார் மூன்று பக்கத்திற்கு நடிகை நயன்தாரா தனுஷுக்கு சாபம் கொடுப்பது போல வார்த்தைகளால் பொளந்து கட்டி இருக்கின்றார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகளும், அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் பயன்படுத்த நயன்தாரா தனுஷிடம் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் 3 செகண்ட் வீடியோவை பயன்படுத்துவதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் கேட்டது தான் பெரிய பிரச்சினையாக பேசப்படுகின்றது.

ஆனால் இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகை நயன்தாராவுக்கு 27 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறி வருகிறார்கள். கடந்த பல வருடங்களாக தனுஷ் கட்டி காத்து வந்த இமேஜை மொத்தமாக டேமேஜ் செய்து விட்டார் நடிகை நயன்தாரா. என் மீதும் என் கணவர் விக்னேஷ் சிவன் மீதும் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பால் எங்களுக்கு தனுஷ் அனுமதி தரவில்லை. எங்கள் திருமண ஆவணப்படத்தில் வெறும் 3 நொடி காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதையும் படிங்க: 10 கோடியா கேட்குறீங்க!.. ஃபிரியா பாருங்க!.. வீடியோவை பகிர்ந்து தனுஷை அசிங்கப்படுத்திய விக்கி!…

நானும் ரவுடிதான் படத்தின் போது எங்கள் செல்போனில் பதிவு செய்த காட்சியை பயன்படுத்தியதற்கு 10 கோடி கேட்பீர்களா? தனுஷின் கீழ் தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. நடிகர் தனுஷ் தனது அப்பாவி ரசிகர்கள் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பாதி கூட உண்மையாக இல்லை என்று மிகவும் ஆவேசமாக நடிகை நயன்தாரா பதிவுகளை வெளியிட்டு இருப்பது வைரலாகி வருகின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.