ராக்கி, சாணிக் காயிதம் போன்ற படங்களை எடுத்த அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படத்தை பார்த்துவிட்டு அருண் மாதேஸ்வரன் மீது எத்தனை பேர் வழக்கு போடப் போகின்றனர் என்று தெரியவில்லை. ட்ரெய்லரை பார்த்துவிட்டு மட்டுமே கூட தாராளமாக வழக்கு தொடரலாம். அந்த அளவுக்கு வன்முறை காட்சிகள் மட்டுமே நிரம்பி வழிகின்றன.
இதையும் படிங்க: யார்கிட்ட இருந்து வேணுனா தப்பலாம்! ப்ளூ சட்டை மாறன்கிட்ட முடியுமா? சிவகார்த்திகேயனை கிழித்து தொங்கவிட்ட பதிவு
பிரிட்டிஷ் காரர்களிடம் சிக்கித் தவிக்கும் ஒரு கூட்டத்தினர் அவர்களை எதிர்த்து எப்படி போராடுகின்றனர் என்கிற கதையுடன் உருவாகி உள்ளது இந்த கேப்டன் மில்லர்.
தனுஷ் வழக்கத்தை விட அதிகமாகவே இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெளிவாக தெரிகிறது. ட்ரெய்லர் ஆரம்பிப்பது முதல் முடிவது வரை எத்தனை துப்பாக்கி குண்டுகள் கிளினிக் துளைத்தன என எண்ணக் கூட முடியாத அளவுக்கு ஒரே துப்பாக்கி சத்தமாகவே குண்டுகள் முழங்க கேப்டன் உள்ள டிரைவர் ரத்த களரியாகவும் கலவர பூமியாகவும் காட்சியளிக்கின்றன.
இதையும் படிங்க: வறுமையில் வாடும் விஜயகாந்த் சகோதரர்கள்! ஊருக்கே உதவியவர் – அவர் தம்பிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா?
பிரியங்கா மோகன் சாணிக் காயிதம் படத்தில் எப்படி கீர்த்தி சுரேஷ் ஒட்டவே ஒட்டாமல் நெத்தியில் ஒரு சிறிய ரத்த காயம் மற்றும் கையில் துப்பாக்கியுடன் இருப்பாரோ அதேபோல இந்த படத்தில் தனித்து தெரிகிறார். சிவராஜ்குமார் ஒரே ஒரு செகண்ட் குயிலியுடன் வரும் காட்சியிலேயே பிரம்மிக்க வைக்கிறார்.
கண்டிப்பாக கேப்டன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் 1 மற்றும் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் படங்களுக்கு போகி கொண்டாடி விடும் என்றே தெரிகிறது.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…