சிம்பு நடிக்க இருந்த மாஸ்ஹிட் படத்தை தட்டிவிட்ட தனுஷ்… இது பொறாமை ப்ரோ…

Simbu Dhanush: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு சீசனிலும் இது முக்கிய நடிகர்களிடையே போட்டி நிலவுவது சாதாரணமானதுதான். அந்த போட்டி நடிகர்கள் தங்களுடைய படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டு மாஸ் காட்டிக் கொள்வது நடந்தாலும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்க மாட்டார்கள்.
அப்படி இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்து விட்டால் அது இன்னொரு நடிகரின் புகழை பெரிய அளவில் குறைத்து விடும் என்ற எண்ணம் இன்னமும் கோலிவுட்டில் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் இணைந்து நடிக்க இருந்த ஒரு படத்தை தனுஷ் தடுத்து அந்த படத்தில் அவர் மட்டும் நடித்த சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: தனுஷூக்கு வில்லன் S.K. இவருக்கு வில்லன் யாரா இருக்கும்? பிரபலம் போடும் ரூட் இதுதான்..!
தனுஷின் நடிப்பில் மாஸ் ஹிட் அடுத்த திரைப்படம் வடசென்னை. வெற்றிமாறன் எழுதி இயக்கிய இப்படத்தை தனுஷ் தயாரித்து இருப்பார். இப்படத்தில் தனுஷ் உடன் இயக்குனர் அமர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், டேனியல் பாலாஜி, பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
வசூலில் சாதனை படைத்த இப்படத்திற்காக தனுஷ் இருக்கு நிறைய விருதுகள் குவிந்ததும் குறிப்பிடத்தக்கது. அமர் நடிப்பில் ராஜன் கேரக்டரும், தனுஷின் அன்பு கேரக்டரும் தற்போது வரை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் முதலில் வெற்றிமாறன் அன்பு கேரக்டருக்கு நடிகர் சிம்புவை தான் தேர்ந்தெடுத்தாராம். ராஜன் கேரக்டரில் தனுஷின் நடிக்க வைக்க கேட்டபோது தனக்கு அவ்வளவு பெருந்தன்மை எல்லாம் இல்லை.
இதையும் படிங்க: பாக்கியராஜ் படத்தில் சிவாஜி நடிக்க இதுதான் காரணமாம்..! மனுஷனுக்கு எவ்ளோ பெரிய மனுசு..!
என்னால் ராஜன் கேரக்டரில் நடிக்க முடியாது என தனுஷ் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இதை தொடர்ந்து இயக்குனர் அமருக்கு கால் செய்து ராஜன் கேரக்டரில் நடிக்க வைக்க பெரிய அளவு பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால் அவரோ கதை சரியாக இல்லை என முதலில் மறுத்தாலும் தனுஷ் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கவே அவர் வலியுறுத்தலின் பேரில் மட்டுமே வடசென்னை படத்தில் நடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.