பெரிய அளவில் பேசப்பட்ட கேரக்டர்! விருப்பமே இல்லாமல் இருந்த விவேக்கை வற்புறுத்தி நடிக்க வைத்த ஹீரோ

by Rohini |   ( Updated:2023-10-01 01:04:31  )
vivek
X

vivek

Actor Vivek: தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக். என்.எஸ்.கே போன்று சிந்தனைக் கருத்துக்களை தனது நகைச்சுவை மூலம் மக்கள் மத்தியில் விதைத்தவர். இவரின் ஒவ்வொரு நகைச்சுவையிலும் ஏதாவது ஒரு சமூக கருத்துக்கள் மறைந்திருக்கும்.

அனைத்து முன்னனி நடிகர்களுடனும் விவேக் நடித்திருக்கிறார். கல்லூரி தோழனாக, பக்கத்து வீட்டுக்காரனாக ,குணச்சித்திர நடிகராக என அனைத்துக் கோணங்களிலும் தன்னுடைய அசாத்தியமான நகைச்சுவையை அள்ளி வீசியிருக்கிறார்.இவரின் திடீர் மரணம் தான் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

இதையும் படிங்க:இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..

உத்தமபுத்திரன் என்ற படத்தில் எமோஷன் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரத்தில் விவேக் நடித்திருப்பார். தனுஷ், ஜெனிலியா , பாக்யராஜ் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த ஒரு காமெடியான திரைப்படமாக இப்படம் வெளியானது. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே விவேக்கிற்கு விருப்பமே இல்லையாம் .

ஏனெனில் வசனங்களே இல்லாமல் மற்றவர்களை பார்த்துக் கொண்டே இருப்பதால் தனக்கு வேலையே இல்லையோ என்று நினைத்தாராம் விவேக். ஆனால், அவரை வற்புறுத்தி நடிக்க வைத்தவர் தனுஷ். படம் வெளியாகி அவரின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்ட பிறகே அந்த கதாபாத்திரத்தின் அழுத்தம் அவருக்குப் புரிந்ததாம்.

எனவே, தனுஷுக்கு நன்றியைத் தெரிவித்தாராம் விவேக். விவேக் - தனுஷ் காம்போ ஒரு சிறந்த காம்போவாகவே பார்க்கப்பட்டது. படிக்காதவன், வேலையில்லாத பட்டதாரி போன்ற படங்களிலும் தனுஷுடன் இணைந்து விவேக் செய்யும் அட்ராசிட்டி பார்ப்பவர்களை உற்சாகப்படுத்தியது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: நயன்தாரா பார்த்தா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க!.. என்ன கொடூரம் புஷ்பா இது? கடுப்பான ஃபேன்ஸ்!

Next Story