காசு கொடுத்து தனுஷ் முகத்த பாக்க வரமாட்டாங்க.?! கழுவி ஊற்றிய சினிமா பிரபலம்.!
சினிமாவில் அறிமுகமாகும் போது பெரும்பாலான நடிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களையே முதலில் அதிகமாக அனுபவித்திருப்பார்கள். அதன்பிறகு அதனை எதிர்கொண்டு கடினமாக உழைப்பின் மூலமே முன்னணி நடிகர்கள் வரிசையில் பலர் அமர்ந்துள்ளனர். அதற்கு உதாரணமாக விஜய், விக்ரம், தனுஷ் என பலரை குறிப்பிடலாம்.
இதில் தனுஷ் அறிமுகமான முதல் படத்திலேயே நேரடியாகவே விமர்சனங்களை எதிர் கொண்டவர். அவர் முதன்முதலாக தனது தந்தை தயாரிப்பில், தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை எனும் படத்தில் நடித்தார்.
அந்த படம் ரிலீசுக்கு ரெடியாக இருந்த சமயம், வினியோகஸ்தர்கள் பலர் இந்தப் படம் தேறாது என்பது போலவே வாங்கி சென்றுள்ளனர். அதிலும் ஒரு குறிப்பிட்ட ஏரியா கடைசி வரை விற்கவே இல்லையாம். அந்த ஏரியாவை விற்பதற்காக ஒரு பிரபல விநியோகஸ்தரை கூப்பிட்டு அந்த படத்தை போட்டு காண்பித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா.
இதையும் படியுங்களேன் - ரஜினியின் இந்த மாஸ் காட்சி வெறும் ஒரு மணி நேரத்தில் எடுக்கப்பட்டதா.?! சத்தியமா நம்ப முடியலேயேபா.!
அந்த படத்தை பார்த்த விநியோகிஸ்தர் சொல்லாமல் கொள்ளாமல் தியேட்டரில் இருந்து வெளியேறி சென்றுவிட்டாராம். அதன்பிறகு அந்த விநியோகஸ்தரை கஸ்தூரிராஜா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நமது பிள்ளைகள் நமக்கு அழகாக தெரிவார்கள். ஆனால், பார்க்கும் ஆடியன்ஸ் இந்த முகத்தை எப்படி காசு கொடுத்து தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள் எனக்கேட்டு போனை வைத்து விட்டாராம்.
அதன்பிறகு ஒரு இரண்டு வருடங்கள் கழித்து அதே தனுஷ் படத்தை அதே விநியோகிஸ்தர், கஸ்தூரிராஜாவை தொடர்பு கொண்டு எப்படியாவது இந்த படத்தை எனக்கு வாங்கி கொடுங்கள் என்று கேட்கும் அளவிற்கு தனுஷ் வளர்ந்துவிட்டராம். இதனை கஸ்தூரி ராஜா அண்மையில் ஒரு மேடையில் பெருமையாக பேசி இருந்தார்.