Raayan
சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ராயன். இந்தப் படத்தை இயக்குபவரும் தனுஷ் தான். அவரது இயக்கத்தில் இது 2வது படம்.
எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், ஜெயராம், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்பட பலரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ் தனுஷின் பிறந்த நாள் அன்று அதாவது ஜூலை 26ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து வருகிறார்.
இதையும் படிங்க… ரஜினி அங்கிள் மட்டும் அல்ல.. இத்தனை ஹீரோக்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளாரா மீனா?
இந்தப் படத்திற்கான 2 பாடல்களும் வெளியாகி விட்டன. அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் என்று அந்தப் பாடல்கள் வந்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. படத்தில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் உள்ளார். இந்தப் படத்தைப் பற்றிய புதிய தகவல் தற்போது வந்துள்ளது. இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
தனுஷ் நடித்து இயக்கும் படம் ராயன். இந்தப் படம் ஜூன் 12ன்னு ரிலீஸ் தேதியைக் குறிச்சாங்க. ஆனா அவங்க வேணாம்னு முடிவு பண்ணிட்டாங்க. தேர்தல் நேரம் என்பதால் நாங்க தள்ளி வர்றோம்னு சொன்னாங்க. ஆனா உள்ளுக்குள்ள படம் அவங்க நினைச்ச மாதிரி நல்லா வரலயாம். சில இடங்கள்ல ரீ ஷூட் பண்ணி எடுக்கலாம்னு சன் பிக்சர்ஸ் சொன்னாங்களாம். அதுல தனுஷ் அப்செட் ஆகிட்டாராம்.
இதையும் படிங்க… விஜய் சேதுபதிக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்!.. 2வது நாளில் எகிறிய மகாராஜா வசூல்!.. இத்தனை கோடியா?..
சேகர்கம்லா படத்துல தனுஷ் பிசியா இருக்காராம். இந்தி, தெலுங்கு படம்னு அவருக்கு நிறைய போயிக்கிட்டு இருக்காம். ஒரு பக்கம் ஏ.ஆர்.ரகுமான் ரீ ரிக்கார்டிங் நடக்குது. இதெல்லாம் முடிஞ்சா தான் இன்னொரு தேதியை அவங்க சொல்வாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி. இது 2017ல் வெளியானது. தனுஷ், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்பட பலர் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷாலும் சுந்தர்.சி-யும்…
திரையுலகில் OTT…
ரஜினியின் 163…
தமிழ் சினிமாவில்…
நேற்று துபாய்…